விஜய்யுடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க திருமாவளவன் மறுப்பு?
சென்னையில் நடைபெற உள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை : வருகின்ற டிசம்பர் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட விகடன் பதிப்பகம் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் (விசிக துணை பொதுச்செயலாளர்) நிறுவனமும் இணைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் வருகை தந்து விசிக தலைவர் திருமாவளவன் கையால் அம்பேத்கர் புத்தகத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஒரே மேடையில் இருவரும் பங்கேற்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அளவில் பேசுபொருளானது. ஏனென்றால், த.வெ.க மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்களை வைத்து திருமாவளவன் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
எனவே, இந்த சுழலில் இருவரும் ஒரே மேடையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டால் எப்படி இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தின் கண்கள் இந்த விழாவின் பக்கம் தான் இருந்தது. இந்த சுழலில், அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் திருமாவளவன் பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில், விஜய் வருகை தரவுள்ளதால் தான் தற்போது அவர் மறுத்துள்ளாதாக வெளியாகியிருக்கும் செய்தி அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.
மேலும். ஏற்கனவே, நவம்பர் 9-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் ” இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்திருப்பது விகடன் பதிப்பகம் தான். அவர்கள் தான் இந்த நிகழ்வு குறித்தும், அதில் யார் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்தும் அறிவிப்பார்கள்” என அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025