1 மணி வரை இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, இன்னும் சில மாவட்டங்களில் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரம் அதாவது 1 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.