“அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம்” – அதானி கிரீன் எனர்ஜி அறிக்கை!
250 மில்லியன் டாலர் லஞ்சத் திட்டத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

டெல்லி : அமெரிக்காவில் கவுதம் அதானி உள்ளிட்ட அதானி குடும்பத்தினருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம்’ என்று அதானி கிரீன் எனர்ஜி விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு சுமார் 2,110 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் அந்த சூரிய மின்விநியோக ஒப்பந்தம் பெற, இந்திய அதிகாரிகளுக்கு ரூ.20,000 கோடி லஞ்சம் தர முயற்சி என புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை முன்வைத்து அமெரிக்காவில் ரூ.25,000 கோடி நிதி திரட்டியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதானி கிரீன் எனர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவில் புகார் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, அதானி கிரீன் எனர்ஜியின் துணை நிறுவனங்கள் அமெரிக்க டாலர் மதிப்பிலான பத்திரங்களின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.
கௌதம் அதானி மற்றும் பிற குழு உறுப்பினர்கள் 250 மில்லியன் டாலர் லஞ்சத் திட்டத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
அதே நேரத்தில், குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றவாளிகள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள் என்றும் அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் கூறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025