மேகவெடிப்பு : கொட்டித் தீர்க்கும் கனமழை.. வெள்ளக்காடாக மாறிய ராமேஸ்வரம்!

ராமேஸ்வரத்தில் கன மழை கொட்டித்தீர்த்த நிலையில், 24 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

rameswaram rain

ராமநாதபுரம் : வளிமண்டல சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினத்தில் இருந்தே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று மலையில் ராமேஸ்வாரத்தில் மிகவும் கனமழை பெய்த நிலையில், தற்போது சில பகுதிகளில் கனமழை விட்டு விட்டு வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக ராமேஸ்வாரத்தில் பல இடங்களில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது.

அதைப்போல, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் கனமழை காரணமாக தெற்குவாடி பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர்களுக்கு சொந்தமான வீடுகள் சேதம் அடைந்துள்ளது. திடீரென தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

திடீரென இப்படி கனமழை கொட்டி தீர்த்த காரணமே ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது தான். இதன் காரணமாக தான் அந்த பகுதிகளில் கனமழை காட்டு காட்டு என்று காட்டி வருகிறது.

பாம்பனில் மேக வெடிப்பு ஏற்பட்டு வெறும் 3 மணி நேரத்தில் ( காலை 11.30  – 2.30 மதியம்) 19 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. அதே போல, ராமேஸ்வரத்தில் கன மழை கொட்டித்தீர்த்த நிலையில், 24 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
devdutt padikkal kl rahul
muthu,meena (29) (1)
ar rahman and saira banu bayilvan ranganathan
adani green energy
adani down