250 மில்லியன் டாலர் லஞ்சம்: அதானிக்கு பிடிவாரண்ட்? அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!
கௌதம் அதானி மற்றும் அவரது நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி மீது அமெரிக்காவில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக, கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
அதாவது, சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் (சுமார் ரூ. 2110 கோடி) லஞ்சம் கொடுக்க கொடுக்கப்பட்டதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுமார் ரூ.16,000 கோடி லாபம் கிடைக்கும் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை பெற, இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,110 கோடி அதானி சார்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது அமெரிக்க பெடரல் நீதிமன்றம்.
மேலும், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டபட்ட பணத்தை முதலீடு செய்தாலும், அந்த பணத்தை லஞ்சமாக கொடுப்பதும் அமெரிக்க சட்டப்படி குற்றமாகும் என்பதால், அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அட்டர்னி அலுவலகத்தின் படி, இந்தியாவில் சூரிய ஆற்றல் தொடர்பான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 2110 கோடி) லஞ்சம் தருவதாக அதானி உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இந்த திட்டம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அதானியைத் தவிர, சாகர் அதானி, வினீத் எஸ் ஜெயின், ரஞ்சித் குப்தா, சிரில் கபெனிஸ், சவுரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா மற்றும் ரூபேஷ் அகர்வால் ஆகிய ஏழு பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளிடம் பொய் சொல்லி இந்த லஞ்சப் பணத்தை வசூலித்ததாக அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.