ஆசிய மகளிர் ஹாக்கி: 3வது முறையாக சாம்பியன் பட்டம் இந்தியா.!

மகளிர் ஆசிய ஹாக்கி தொடரில் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் சீனாவைத் தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாக வென்றது இந்திய அணி.

Asian Women Hockey Championship 2024

பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகார் மாநிலம் ராஜ்கிரில் ராஜ்கிரில் நவ.11ம் தேதி முதல் தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் மலேசியா என மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன.

இந்த லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் இதர அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும் என்ற முறையில், 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது.

இந்த போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று (நவம்பர் 20) மாலை நடைபெற்றது, இதில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது. ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கையில், இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி சமனில் முடிந்தது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய 1 நிமிடத்தில் தீபிகா இந்தியா அணிக்கு ஒரே கோலை அடித்தார். இது தவிர பல கோல்களை அடிக்க சீனா முயன்றும் அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை.

இந்நிலையில், மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் சீனாவை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கி (1-0) என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தீபிகா அடித்த ரிவர்ஸ் ஹிட் கோல் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் அவர் அடித்த 11வது கோல் ஆகும். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியிருந்தது.

தற்போது, மூன்றாவது முறையாக இந்தியா பட்டத்தை தன்வசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அபார வெற்றியை ருசிக்கும் வகையில், இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதற்கு முன், 2016, 2023-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Goutam Adani
dhanush aishwarya
devdutt padikkal kl rahul
muthu,meena (29) (1)
ar rahman and saira banu bayilvan ranganathan