AUS vs IND : ரோஹித் இல்லை..இந்திய அணியால் வெல்ல முடியுமா? வெற்றி வியூகம் என்ன?

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரானது நாளை மறுநாள் தொடங்கவுள்ளது.

AUS vs IND , 1st Test

பெர்த் : இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்த ஆண்டிற்கான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்காக இந்திய அணி கடுமையான பயிற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

ரோஹித் ஆப்சென்ட் …

நடைபெற போகும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, இடம்பெற மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக செயல்படுவார் எனவும் பிசிசிஐ சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதனால், கேப்டன் பொறுப்பில் இருக்கும் ஒரு அனுபவம் சற்று குறைவாக இந்த போட்டியில் காணப்படலாம்.

ஆனாலும், பும்ரா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் ஒரு அணியை கையாளும் திறன் பும்ராவிற்கு இருப்பதால் கேப்டன்ஷிப்பில் கோட்டை விடமாட்டார் எனும் நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

பிளெயிங் லெவன் எப்படி இருக்கும்?

இந்திய அணி இந்த முதல் போட்டியில் 3 வேக பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடவுள்ளதாக ஒரு தகவல் எழுத்துள்ளது. அதே போல, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடிய ஹர்ஷித் ராணா இந்த முதல் போட்டியில் அறிமுகமாகவுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனால், அதன்படி பார்க்கையில் ஹர்ஷித் ராணா (அல்லது) ஆகாஷ் தீப் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. மேலும் இவர்களைத் தொடர்ந்து, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்வினை களமிறக்கும் கம்பீர் ..?

இந்திய அணியின் ஸ்பின் பவுலிங்கை பொறுத்த வரையில், பலமான பக்கமாகவே பார்க்கப்படுகிறது. அதன்படி, கடந்த நியூஸிலாந்து அணியுடனான தொடரில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இந்த முதல் போட்டியில் பயிற்சியாளராக கம்பீர் விளையாட வைப்பார் என கூறப்படுகிறது.

இதனால், அனுபவம் உள்ள ஜடேஜா மற்றும் விளையாட்டின் போக்கை மாற்றும் அக்சர் பட்டேல் ஆகியோருக்கு இந்த போட்டியில் இடம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பின் பவுலிங் இந்திய அணியின் முதுகெலும்பு என்பதால் அதில் அதிக கவனம் செலுத்தி இந்திய அணி விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பலவீனம் …

இந்திய அணிக்கு பலவீனம் என்றால் அது பேட்டிங்கும், பேட்ஸ்மேனும் தான். கடந்த நியூஸிலாந்து தொடரில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியதால் இந்திய அணியின் பலவீனம் என்பது பேட்டிங்காகவே பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா இல்லாததன் காரணமாக கே.எல்.ராகுலை தொடக்க வீரராக களமிறக்குவார்கள் என்பது ரசிகர்களின் கணிப்பாகும். அதே போல, பேட்டிங்கில் நட்சத்திர வீரரான விராட் கோலி கண்டிப்பாக செயல்பட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

அவர் சிறப்பாக விளையாடினாள் இந்திய அணிக்கு மேலும் வலு கிடைக்கும். இதனைத் தொடர்ந்து இந்த போட்டியில் ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி களமிறங்கவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. அப்படி அவர் தேர்வானால் கண்டிப்பாக ஜடேஜாவிற்கு மாற்று வீரராகவே களமிறங்குவர். இதனால் அவர் மீது பலத்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆகையால் அவரும் சிறப்பாகவே விளையாட வேண்டும்.

வெற்றி வியூகம் …

ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் சமீபத்தில் வலுவான ஒரு அணியாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வெல்ல வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய அணியின் வலுவான பேட்டிங்கை சேதப்படுத்த வேண்டும்.

அதாவது ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா உள்ளிட்ட இடது கை பேட்ஸ்மேன்கள் அணியில் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், பும்ரா போன்ற இந்திய அணியின் பவுலர்கள் அதனை சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இந்திய அணி ஸ்பின் பவுலிங்கை நன்றாக பயன்படுத்தினால், பேட்டிங்கில் ஒரு வலுவான தொடக்கம் அமைந்தால் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா அணியை இந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறலாம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்