சபரிமலை செல்பவரா நீங்கள்? இந்த முக்கிய ‘வாட்ஸ்அப் AI’ தகவல் உங்களுக்கு தான்!

சபரிமலை செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு வாட்ஸ்அப் செயலி மூலம் உதவிடும் வகையில் உதவி எண்ணை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

Sabarimala Ayyappan koil

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி விட்டனர். மேலும், சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் , அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, சன்னிதானம் முதல் நிலக்கல் வரையில் 48 இடங்களில் பிஎஸ்என்எல் இலவச wifi hotspot வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அடுத்தகட்டமாக, மாவட்ட ஆட்சியர் பிரேம் கிருஷ்ணா ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார். அதில், ஐயப்ப பக்தர்களுக்கு உதவிடும் வகையில், வாட்ஸ்அப் செயலியில் AI எனும் செயற்கை தொழில்நுட்ப உதவியுடன் அடிப்படை வசதிகள் குறித்த தகவல்கள் எளிதில் கிடைக்கப்பெறும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த AI வாட்ஸ்அப் எண் மூலம் சன்னிதான தரிசன நேரம், தங்கும் வசதி, அருகில் உள்ள மற்ற சேவைகள், அவசர உதவி எண்கள், KSRTC பேருந்து சேவைகள், ஹோட்டல்கள் ஆகிய விவரங்கள் கிடைக்கப்பெறும். இந்த அவசர உதவி எண்ணாது, 6238008000 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு Hi என மெசேஜ் செய்து, தங்களுக்கான மொழியை தேர்வு செய்யவும். மலையாளம் ,  ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய 6 மொழிகளில் இந்த செயலி செயல்படும் என சபரிமலை அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்