வாழைப்பழ கதையாக மாறிய சிறகடிக்க ஆசை சீரியல்..
சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் மனோஜுடம் விசாரணை நடத்தும் குடும்பம்..
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 20] எபிசோடில் மனோஜுடம் விசாரணை நடத்தும் குடும்பம்..
மனோஜுக்கு டப்பிங் செய்யும் ரோகிணி ;
முத்தும் ரவியும் மனோஜ் கிட்ட சந்தோஷி சார் பணம் கொடுத்ததை ஏன் என்கிட்ட சொல்லல அப்படின்னு கேட்க அதற்கு மனோஜ் சூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் சொல்லலாம்னு நெனச்சேன் அப்படின்னு சொல்றாரு.. திரும்பத் திரும்ப கேட்டாலும் வாழைப்பழக்காதை மாதிரியே சொல்றாரு ..இதைக் கேட்ட முத்துவுக்கும் ரவிக்கும் கோவம் வந்து அடிக்கப் போயிடறாங்க.. இப்ப மறுபடியும் அண்ணாமலை கேக்குறாரு அண்ணாமலை கிட்டயும் இதே பதில் சொல்ல அண்ணாமலைக்கும் கோவம் வருது .. அவரும் அடிக்கப்போறாரு .. இப்போ ரோகிணி கிட்ட கேக்குறாங்க சந்தோஷி சார் பணம் கொடுத்தது உங்களுக்கு தெரியுமா அப்படின்னு அதுக்கு ரோகிணியும் சூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் குடுக்கலாம்னு சொன்னாரு அப்படின்னு சொல்றாங்க.. என்ன நீங்க மனோஜ்க்கு டப்பிங் பண்றீங்களா அப்படின்னு ஸ்ருதி கேக்குறாங்க..
இப்ப முத்து சொல்றாரு இனிமேல் இதை பத்தி கேட்க வேணாம் பர்ஸ்ட் நீ பணத்தை போட்டு விடு எங்களுக்கு அப்படின்னு சொல்ல ரோகிணி எல்லாருக்குமே பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்றாங்க.. ரவி விஜயா கிட்ட அம்மா உங்க செல்லு எங்க அப்படின்னு அவங்க செல்ல செக் பண்றாங்க அவங்களுக்கு அமௌன்ட் கம்மியா வந்து இருக்குது.. அம்மாவுக்கு நான் நைட்டே பாதி பணம் கொடுத்துட்டேன் அப்படின்னு சொல்றாரு மனோஜ்.. இதைக்கேட்ட அண்ணாமலை அப்போ உனக்கு ஏற்கனவே தெரியுமா அப்படின்னு கேக்குறாங்க. ஆமாங்க சூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்னு இருந்தேன் அப்படின்னு மனோஜ் மாதிரியே இவங்களும் ஆரம்பிக்க அண்ணாமலை டென்ஷனாகி நீ எதுவுமே பேச வேணாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு..
மீனாவை அவமானப்படுத்தும் விஜயா ;
இப்போ மறுநாள் காலையில முத்து வண்டிக்கு டுயூ கட்டலாம்னு போறாரு அங்கே ஆல்ரெடி மீனா கட்டிட்டு கிளம்பி இருக்காங்க.. மீனா பாத்துட்டு என் மீனா இப்ப நீ கட்டின நானே கட்டியிருப்பேன்ல . பரவால்லங்க கையில காசு இருக்கும் போதே கட்டிடலாம் அதனாலதான் வந்தேன்னு சொல்றாங்க. இப்ப அண்ணாமலையும் முத்துவுக்காக டியூ கட்றதுக்காக வராரு ..முத்துவும் மீனாவும் வேண்டாம்னு சொல்லுறாங்க .. சரி நான் அடுத்த மாசம் கட்டிக்கிறேன்னு அண்ணாமலை சொல்றாரு.. மீனா பார்வதி ஆன்ட்டிக்கு பூ கொண்டு போகணும்னு சொல்லி கிளம்புறாங்க.. பார்வதியும் மீனாவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. மீனா வந்ததும் பூவை நீயே போட்டு அலங்காரம் பண்ணிட்டு விளக்கேற்றி வைமா அப்படின்னு சொல்றாங்க. விஜயா சொல்றாங்க ஏன் உனக்கு வேற ஆளே கிடைக்கலையா இவகிட்ட ஏன் சொன்ன அப்படின்னு சொல்றாங்க.
மீனா கற்ற பூ நல்லா இருக்கும் அதனால தான் சொன்னேன் . இப்போ பணம் கொடுக்குறாங்க மீனா வேண்டாம்னு சொல்றாங்க.. அதுக்கு விஜயா உங்களுக்கு கொடுத்து வாங்கி பழக்கம் இல்ல திருடி தானே பழக்கம் அப்படின்னு எல்லாரும் முன்னாடியுமே சொல்லி அவமானப்படுத்துறாங்க.. பார்வதியும் கொஞ்சம் சும்மா இரு விஜயா இப்படித்தான் நீ பேசுவியா அப்படின்னு திட்டுறாங்க .. போய் மொட்டை மாடியில் இருக்கிற துணி எல்லாம் எடுத்து மடிச்சு வச்சுட்டு போ அப்படின்னு விஜயா மீனாவ பாத்து சொல்றாங்க மீனாவும் சரிங்க அத்தைனு சொல்லுறாங்க ..இந்த டைம்ல ரதியோட அம்மா வராங்க.. வணக்கம் மாஸ்டர் நீங்க சேலை கேட்டதா என்னோட பொண்ணு சொன்னா அதான் கொண்டு வந்தேன்னு சொல்றாங்க .. ஒவ்வொரு புடவையா விஜயா வச்சு பாத்துட்டு இருக்காங்க இதோட எபிசோடு முடிச்சு இருக்காங்க..