இப்படி பேசினா ஸ்டுடியோ பக்கம் வராதீங்க! அந்த விஷயத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரஹ்மான்!

வைரமுத்து மற்றவர்களை பற்றி புறம் பேசிய காரணத்தால் ஏ.ஆர்.ரஹ்மான் கோபமடைந்து பேசிய விஷயம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

MD ar rahman

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரத்துச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அவரைப்பற்றி யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் குறித்து இணையவாசிகள் தேடிக்கொண்டு வருகிறார்கள். எனவே, அவரை பற்றி யாருக்கும் தெரியாத மறுபக்கங்கள் குறித்த தகவல்களும் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது.

அப்படி தான் தற்போது ரஹ்மான் எந்த அளவுக்கு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் என்பதற்கு உதாரணமாக விளங்கும் வகையில் ஒரு விஷயம் தெரிய வந்துள்ளது. அது என்னவென்றால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதுமே அதிகம் பேசாமல் குறைவாகப் பேசக்கூடிய ஒரு ஆள்…அதைப்போல மற்றவர்களைப் பற்றி பின்னாடி பேசுவது அவருக்குச் சுத்தமாகப் பிடிக்காது.

அப்படிப் பேசினால் கூட ரஹ்மான் சற்றுக்கடுப்பாகிவிடுவார். அப்படி ஒரு முறை வைரமுத்து ஸ்டுடியோவில் மற்றவர்களை பற்றி பேசும்போது ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் கோபமடைந்துள்ளார். ஆரம்பக் காலத்தில் வைரமுத்து இளையராஜாவுடன் தான் பயணித்து பாடல்களை எழுதி வந்தார். அதன்பிறகு அவர்களுக்குள் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர்.

பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் உடன் வைரமுத்து கூட்டணி இணைந்தபோது தொட்டதெல்லாம் தங்கம் என்கிற வகையில், இவர்களுடைய கூட்டணியில் வெளியான பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட்டானது. எனவே, இருவரும் ஒன்றாக இணைந்தது பல படங்களில் பணியாற்றி வருகிறார்கள். அந்த சமயம் அதிகமாக வைரமுத்து ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் தான் இருப்பார்.

அப்படி ஒரு படத்தில் பணியாற்றும்போது ரஹ்மான் குணம் தெரியாமல் மற்றவர்களைப் பற்றி வைரமுத்து அவரிடம் புறம்பேசிக்கொண்டு இருந்துள்ளார். மற்றவர்களைப் பற்றிப் பேசினால் ரஹ்மான் அதனைக் கேட்டு ரசிப்பார் என்பதால் வைரமுத்து அப்படிப் பேசி வந்துள்ளார். இதனை இரண்டு நாட்கள் கேட்டுக்கொண்டே இருந்த ரஹ்மான் ஒரு கட்டத்திற்கு மேல் கோபமடைந்துள்ளார்.

கோபமடைந்து நீங்கள் மற்றவர்களைப் பற்றி என்னிடம் பேசாதீர்கள்..அப்படிப் பேசுவது எனக்குப் பிடிக்காது… அப்படிப் பேசுவதற்கு உங்களுக்கு ஆசை இருந்தது என்றால் என்னுடைய ஸ்டுடியோவிற்கு வராதீர்கள் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டாராம். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வைரமுத்து இது தான் ரஹ்மான் குணம் என்பதைப் புரிந்துகொண்ட அதற்கு அடுத்த நாளில் அப்படிப் பேசுவதை நிறுத்திவிட்டு வேலை சம்பந்தமாக மட்டுமே பேசினாராம்.

இந்த தகவலைப் பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு தன்னுடைய யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். இந்த தகவலைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவது கூட அவருக்குப் பிடிக்காது இது தான் ரஹ்மான் எனப் பாராட்டி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்