“இப்படி தான் சாய்ராவை சந்திச்சேன்” உருக வைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் காதல் கதை!

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தியை தொடர்ந்து அவர் மனைவி குறித்து பேசிய பழைய வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ar rahman love story

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு நவம்பர் 19 புதன்கிழமை விவாகரத்து செய்வதாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இவர்களுடைய, இந்த முடிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவருடைய மனைவி இருவரும் ஒன்றாக இருந்தபோது பேட்டிகளில் கலந்துகொண்டு பேசிய வீடியோக்களும் வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ரா பானுவை முதல் முறையாகப் பார்த்தது எப்போது? எப்படி திருமணம் நடந்தது என்பது பற்றிப் பேசியிருக்கிறார்.

முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ரா பானுவை 1995-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி சந்தித்துள்ளார். அன்று ரஹ்மானின் 28-வது பிறந்த நாளும் என்பதால் அவரை பார்த்தவுடன் அன்றையே நாளிலே அவரிடம் பேசத் தொடங்கியிருக்கிறார். இருவருக்கும் பிடித்துப்போக தொலைபேசி மூலம் சில மாதங்கள் பேசி உள்ளார்கள்.

அப்படிப் பேசிக்கொண்டு இருந்த சமயத்தில் சாய்ரா ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா என்று? ஏ.ஆர்.ரஹ்மான் வெளிப்படையாகவே கேட்டுள்ளார். திடீரென ரஹ்மான் இப்படிக் கூறியதும் சாய்ரா இன்ப அதிர்ச்சியாகி ஒன்னும் பேசாமல் இருந்துள்ளார்.

பிறகு திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் தெரிவித்திருக்கிறார். பிறகு இந்த விஷயத்தை வீட்டில் எடுத்துச் சொல்லவேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் முடிவெடுத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தயார் மற்றும் சகோதரிக்கு சாய்ரா யார் என்றும் அவருடைய குடும்பம் யார் என்றும் தெரியாது. ஆனால், அவர்கள் வழக்கமாகச் செல்லும் கோவிலிலிருந்து 5 வீடு தள்ளி அவருடைய வீடு இருந்தது.

எனவே, ரஹ்மான் தயார் மற்றும் சகோதரி நடந்து சென்று சாய்ராவிடம் பேசியுள்ளனர். பிறகு இரு வீட்டார்கள் கலந்து பேசி 1995-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர்களுடையே திருமணம் நடந்தது. எதுவுமே திட்டமிட்டு நடக்கவில்லை எல்லா புகழும் இறைவனுக்கே என்கிறது போல எல்லாம் இயல்பாகவே நடந்தது என்று அந்த பழைய நேர்காணலில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்