“ஸ்டார்ட் அப் தொடங்குறேன் நிதி வேணும்”…கவனத்தை ஈர்த்த ஆட்டோ ஓட்டுநர்!
பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர், வியாபாரம் தொடங்க விரும்பி நிதி திரட்ட வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளதன் மூலம் வைரலாகியுள்ளார்.
பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அந்த கனவுகளைச் சீக்கிரமாக அடைவதற்காக வித்தியாசமான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். அப்படி தான் பெங்களூரில் உள்ள இளைஞன் ஒருவர் தன்னுடைய கனவை அடைய அனைவரையும் கவரும் வகையில், வித்தியாசமான முயற்சி ஒன்றை எடுத்திருக்கிறார்.
பெங்களூரைச் சேர்ந்த சாமுவேல் கிறிஸ்டி என்ற இளைஞர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு இப்போது ஆட்டோ ஒட்டிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய கனவாக இருக்கும் விஷயம் என்னவென்றால், ஸ்டார்ட்அப் தொடங்க வேண்டும் என்பது தான். இதன் காரணமாகத் தான் ஆட்டோ ஒட்டிக்கொண்டு அதில் வரும் வருமானத்தைச் சேர்த்தும் வைத்து வருகிறார்.
ஸ்டார்ட்அப் தொடங்க நிதி தேவைப்படுவதால் தன்னுடைய கனவை விவரமாக தன்னுடைய ஆட்டோவில் ஒரு பாதகையில் எழுதி பயணிகள் அமரும் இடத்திற்கு அருகே வைத்தார். அதில் ” ஹாய் என்னுடைய பெயர் சாமுவேல் கிறிஸ்டி. நான் பட்டப்படிப்பை முடித்திருக்கிறேன், எனக்கு ஸ்டார்ட் அப் பிசினஸ் தொடங்குவது பெரிய கனவும். எனவே, என்னுடைய இந்த ஐடியாவிற்கு நான் நிதி திரட்டுகிறேன். இதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் பேசுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படி வித்தியாசமாக யோசித்து அவர் தன்னுடைய ஆட்டோவில் எழுதி வைத்து இருப்பது அவருடைய ஆட்டோவில் பயணம் செய்யும் பயனர்களை வெகுவாகவே கவர்ந்தது என்றே சொல்லலாம். அப்படி இதனைப் பார்த்து அசந்து போன ஒருவர் தான் இதனைப் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வரலாகிக் கொண்டு வருகிறது.
இவருடைய வித்தியாசமான இந்த முயற்சியைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படத்தைப் பார்த்த பலரும் உங்களுடைய கனவு கண்டிப்பாக வெற்றிபெறும் எனவும், கனவுகள் நிறைவேறி பெரிய இடத்திற்கு வருவீர்கள் எனவும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.