தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, உட்பட மொத்தம் 10 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

rain update news

சென்னை : தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடி, நாகை, தஞ்சை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த சூழலில், வரும் 4-மணி வரை 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான மலையாகு வாய்ப்பு இருக்கிறது.

அதைப்போல, சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்