“சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்”…இத்தாலி பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி!

பிரேசில் ஜி20 மாநாட்டில் இத்தாலி பிரதமரை சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

PM Modi - Giorgia Meloni

ரியோ டி ஜெனிரோ : பிரேசிலில் 19-வது ஜி20 உச்சி மாநாடானது நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உட்பட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு விவாதம் நடத்தி வருகின்றனர். இதில், ‘சமூக உள்ளடக்கம், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்’ என்பது பற்றி பிரதமர் மோடி பேசி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை மோடி சந்திக்க திட்டமிட்டிருந்தார். அந்த வகையில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை மோடி சந்தித்தார். இருவரும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துவதுக் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

அதன்பின் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் அவரை சந்தித்ததுக் குறித்துப் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “ரியோ டி ஜெனிரோ ஜி 20 மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவதை மையமாக வைத்து எங்களது பேச்சுக்கள் அமைந்தன.

கலாச்சாரம், கல்வி மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் நாங்கள் பேசினோம். இந்தியா-இத்தாலி நட்புறவு ஒரு சிறந்த உலக முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்” என பிரதமர் மோடி அந்த பதிவில் பதிவிட்டிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்