சிறகடிக்க ஆசை சீரியல் – பணத்தை பதுக்க நினைக்கும் மனோஜ் ரோகிணி ..!
சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா..
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா..
போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை ;
ரோகினி ,மனோஜ், விஜயா மூணு பேரும் வீட்டுக்குள்ள என்ட்ரி ஆகுறாங்க.. அந்த டைம்ல முத்துவும் மீனாவும் போட்டோ சூட் பண்ணிட்டு இருக்காங்க ..அப்போ மீனா முக்காடு போட்டு இருக்காங்க இத பாத்த விஜயா யாருடா அந்த பொண்ணு நடு வீட்டுல இப்படி பண்ணிட்டு இருக்க மீனா எங்கன்னு கேக்குறாங்க.. நீ குடிகாரன்னு தான் நினைச்சேன் ஆனா இப்படி கண்டவள கூட்டிட்டு வந்து நடு வீட்ல நிக்க வச்சுருக்க.. மீனா பார்த்தா உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவ ஏய் மீனா எங்கடி போன அப்படின்னு கேக்குறாங்க.. இப்போ முத்து அந்த முக்காட எடுத்து விடுறாங்க.. அத்தை பிசினஸ் பண்ண போறேன் அதுக்காக விளம்பர படம் எடுக்கணும் அதுக்கு தான் போட்டோ சூட் பண்ணிட்டு இருந்தோம் அப்படின்னு சொல்றாங்க .. மீனா அம்மாவுக்கு உன் மேல எவ்வளவு கரிசனம் இருக்குது பாரு அப்படின்னு சொல்றாங்க முத்து. அப்படிலாம் ஒன்னும் இல்ல ஏன் உங்களுக்கு விளம்பர எடுக்கணும்னா வேற எங்கேயாவது போய் எடுக்க வேண்டியதுதானே..
அத்தை என் புருஷன் அந்த மாதிரி ஆள் எல்லாம் இல்ல ஆனா எனக்கு ஏதோ துரோகம் நடக்குதுன்னு பயந்தீங்களே அது போதும் அத்தை.. அப்படின்னு பெருமிதமாக சொல்றாங்க.. இப்போ ரோகினியும் வித்யாவும் சிட்டிக்கு பணம் கொடுப்பதற்காக போறாங்க ..சிட்டியும் பணத்தை வாங்கிட்டு சரி இதோட உங்க பிரச்சினை முடுஞ்சுருச்சுனு நினைச்சுக்கோங்க .. அவன சரி பண்ணி வடநாட்டுக்கு அனுப்பி வச்சுறேன் அப்படின்னு சொல்றாரு. அதோட அந்த பிஎவுக்கு பாதி பணத்தை கொடுக்குறாரு ..இது கூட நல்லா தான் இருக்கு அப்படின்னு பி எ சொல்லிட்டு கிளம்புறாரு.. மனோஜ் ரோகிணி கார்ல போயிட்டு இருக்காங்க.. அப்போ மும்பை பிசினஸ் மேன் சந்தோஷ் சார் கால் பண்றாரு உங்களோட ஷோ ரூம நான் புரமோட் பண்ணனும் மனோஜ் அதுக்கு ஒரு விளம்பர படம் எடுக்கலாம்.
குடும்பமே நடிக்கும் விளம்பர படம் ;
அதுக்காக உங்களுக்கு நான் 25 லட்சம் அக்கவுண்ட்ல போட்டு இருக்கேன். உங்க பேமிலியை வைத்து எடுத்துடுங்க அப்படின்னு சொல்றாங்க.. மனோஜ் சொல்றாரு ஏதாவது பெரிய ஹீரோயினா பார்த்து எடுக்கலாம் இல்ல சார் அப்படின்னு கேட்க அதுக்கு அவரு சொல்றாரு இல்ல இல்ல நேச்சுரலா இருக்கணும் .. இப்போ மனோஜ் ரோகிணிகிட்ட வீட்ல யாருக்கும் நாம பணம் கொடுக்க வேண்டாம் சொல்லவும் வேணாம் ..ரோகிணியும் அப்போ நமக்கு ஏத்த ஆள் தான்னு சந்தோச படுறாங்க .. மனோஜும் ரோகிணியும் வீட்ல வந்து இந்த விஷயத்தை சொல்றாங்க வீட்டில எல்லாரும் ஃபர்ஸ்ட் நடிக்க வராதுன்னு சொல்றாங்க.. அதுக்கப்புறம் சரி நடுச்சு பார்ப்போமே அப்படின்னு எல்லாருமே முடிவெடுக்குறாங்க இதோட இன்னைக்கு எபிசோட முடுச்சுருக்காங்க .