நாட்டை நடுங்க வைக்கும் மங்குட் புயல்…!!பீதியில் பிலிப்பைன்ஸ்…!!

Default Image

பிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் புயல் அச்சம் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பசிபிக் பெருங்கடலிலிருந்து மணிக்கு 255 கிலோ மீட்டர் வேகத்தில் மங்குட் புயல் பிலிப்பைன்சில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் லூசான் தீவில் பெரும் சேதம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. அங்கு வசிக்கும் 42 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. உணவு, குடிநீர் வசதிகளுடன் நிவாரண முகாம்களும், அவசர கால உதவிக்காக ராணுவம் மற்றும் மீட்புக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்