பயணிகள் கவனத்திற்கு! பேருந்து முன்பதிவு செய்யும் நடைமுறை மாற்றம்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இனி 90 நாட்ளுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில் தற்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், அரசுப் பேருந்துகள் முன்பதிவை தொடங்குவதால் பொங்கல் நேர பயணத்திற்கு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் தற்பொழுது மக்களுக்கு ஏதுவாக சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயணம் செய்ய ஏதுவாக, தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என்பதனை 90 நாட்கள் என உயர்த்தியுள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று (18 நவம்பர்) மதியம் 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.
அந்த வகையில், பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொண்டால் சிரமமின்றி பயணிக்கலாம்.