இன்று ஜி20 மாநாடு..! பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி!
இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது. இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டிற்கு கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று கயானாவில் இருந்து ரியோ டி ஜெனிரோவுக்கு சென்றடைந்துள்ளார்.
மாநாட்டில் பங்கேற்கபதற்கு ரியோவில் தரையிறங்கய பிரதமர் மோடிக்கு பிரேசில் அரசாங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் பிரேசில் வாழ் இந்தியர்களும் மோடிக்கு சிறப்பான வரவேற்பை அளித்துள்ளனர்.
இந்த மாநாட்டிற்கு உலக நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இந்த ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்த உச்சி மாநாட்டில், பசி மற்றும் சமூக பாகுபாடுகளுக்கு எதிராக போராடுதல், நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம் ஆகிய 3 விஷயங்களைக் குறித்து விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 நாட்கள் பயணமாக புறப்பட்ட பிரதமர் மோடி நேற்று நைஜீரியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உயரிய விருதான ‘கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் நைஜர்’ என்ற விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து கயானா சென்ற மோடி அங்கிருந்து, மாநாட்டிற்கு கலந்து கொள்ள பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோ சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Acabo de pousar no Rio de Janeiro para participar da Cúpula do G20. Estou animado para as deliberações da Cúpula e para estabelecer diálogos produtivos com os diversos líderes mundiais presentes. pic.twitter.com/GnRchlB51s
— Narendra Modi (@narendramodi) November 18, 2024