பார்டர் கவாஸ்கர் டிராபி : ‘இந்தியா ஜெயிக்கிறது கடினம் தான்’ …மனம் திறந்த ஹர்பஜன் சிங்!

இந்த முறை இந்தத் தொடரை இந்திய அணி வெல்வதற்கு 50% தான் வாய்ப்புள்ளது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Harbhajan Singh

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர். கடைசியாக நடைபெற்ற 2 பார்டர் கவாஸ்கர் தொடரையும் இந்திய அணியே வென்று அசத்தியது.

ஆனால், தற்போது இந்திய அணி இருக்கும் ஃபார்ம் என்பது மிகவும் மோசமாக உள்ளது. கடந்த நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என தோல்வியடைந்தது. இதனால், பெரும்பாலான இந்திய ரசிகர்களே நடைபெறவுள்ள இந்த தொடரை ஆஸ்திரேலிய அணியே கைப்பற்றும் என கூறிவருகின்றனர்.

ரசிகர்களைத் தாண்டி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இந்திய அணி இந்த தொடரை வெல்வது கடினம் தான் என கூறியிருக்கின்றனர். அந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், இந்திய அணி இந்த தொடரை வெல்வது கடினம் தான் என கூறியிருக்கின்றனர்.

சமீபத்தில் தனியார் பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் ஹர்பஜன் சிங் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “இந்த முறை இந்தியா வெல்வதற்கு 50-50 மட்டுமே வாய்ப்புள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் நம்முடைய திடமான பேட்ஸ்மேன்கள் கூட எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தடுமாறினார்கள்.

நம்முடைய சீனியர் வீரர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி இருக்க வேண்டும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அது உங்களுடைய பிரச்சனையை தீர்க்காது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் நல்ல ஆடுகளங்கள் (பிட்ச்) இருக்கும். இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவில் தயாராக வருவார்கள் என்று நான் கருதுகிறேன்.

அதற்கு புஜாரா போன்று பந்தை பழைய தாக்கி விளையாடும் வீரர்கள் நமக்குத் தேவை. கே.எல் ராகுல் அதிகப்படியாக விமர்சிக்கப்பட்டாலும், அவர் ஒரு கிளாஸ் பிளேயர். இந்த தொடரில் நமக்கு 50-50 வெற்றி வாய்ப்பு மட்டுமே இருக்கும். இந்த முறை ஆஸ்திரேலியா வெற்றி பெற கொஞ்சம் அதிக வாய்ப்புள்ளதாக தான் நான் கருதுகிறேன்.

இந்தியா முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் துவக்குவது முக்கியம். ஒருவேளை முதல் போட்டியில் இந்தியா நல்ல துவக்கத்தை பெறவில்லை என்றால் தொடர் முழுவதும் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலைக் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படலாம்”, என்று ஹாபிசன் சிங் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்