“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை என தனியார் வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார்.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று 12 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி முதல் இன்று 17ம் தேதி வரை பருவமழை தீவிரம் அடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த 5 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில், “காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னையில் அடுத்த 9 நாட்களுக்கு (நவ.26 வரை) மழைக்கு வாய்ப்பு இல்லை” என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.