மதியம் 1 மணி வரை இந்த 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

tn rain falll

சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு (பிற்பகல் 1 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், ராமநாதபுரம், திருநல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களிலும் புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்