“வாழு வாழ விடு” …தனுஷுக்கு அட்வைஸ் செய்த நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன்!

நடிகர் தனுஷ் முன்பு பேசிய வீடியோவை பகிர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

nayanthara wiki dhanush

சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி நயன்தாரா வெளியீட்டு இருக்கும் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அனுமதி கொடுக்காதது  கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என நயன்தாரா கூறியிருந்தார்.

அது மட்டுமின்றி, தனுஷை விமர்சித்து அந்த அறிக்கையில் நயன்தாரா பேசியிருந்தார். குறிப்பாக,  தனுஷ் பொதுவாகவே படத்தின் இசை வெளியீட்டு விழா மேடைகளில் “எண்ணம் போல் வாழ்கை”…அன்பை பகிர்வோம் என்பது போல பேசி ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுப்பார்.

அப்படி பேசும் தனுஷ் மேடையில் மட்டும் அப்படி பேச்சுக்கொண்டு முகமூடி அணிந்து வேஷம் போடுவதாகவும் நயன்தாரா கூறி தனுஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்தார். இந்த சம்பவம் திடீரென புயல் காற்றைப்போல கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த சூழலில், தனுஷ் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியீட்டு வாழு வாழ விடு என கூறி அவருக்கு சூசகமாக அட்வைஸ் கொடுக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் அந்த வீடியோவில் பேசும்போது யார் மீதும் வெறுப்பு கட்டக்கூடாது வாழுங்கள்…வாழவிடுங்கள் என கூறினார். அதனை தனுஷிற்கே திருப்பி கூறும் வகையில், ” வாழு… வாழ விடு. அன்பை பரப்புங்கள். ஓம் நம சிவாய. இதையெல்லாம் நம்பும் உண்மையான ரசிகர்களுக்காகவும், அடுத்தவரின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சி காணும் வகையில் தனுஷ் மாற வேண்டும்” என விக்னேஷ் சிவன் சூசகமாக கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)
18.11.2024 Power Cut Details