சிறகடிக்க ஆசை சீரியல்- ஸ்ருதி பணக்கார பைத்தியமா?. என்ன சொல்றீங்க விஜயா?.
சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி..
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி..
மீனாவின் புதிய போட்டோ சூட் ;
மீனா முத்துகிட்ட புதுசா கல்யாண டெக்கரேஷன் எல்லாம் பண்ற வேலைய செய்யலாம்னு இருக்கேங்க.. அப்படின்னு சொல்றாங்க இப்போ சின்னதா டெக்ரேசன் பண்ணி முத்து கிட்ட காட்ட முத்து சூப்பரா இருக்குதுன்னு பாராட்டுறாரு.. சுருதியும் இத பாத்துட்டு செமையா இருக்குது மீனா இதை ஆன்லைன்ல அப்டேட் பண்ணா நிறைய பேர் பார்ப்பாங்க அப்படின்னு சொல்றாங்க.. அதோட உங்களுக்கு தனியா ஒரு வெப்சைட் ஓபன் பண்ணி தரேன் அதுல நீங்க போஸ்ட் எல்லாம் போடுங்க அதுக்கு கொஞ்சம் போட்டோ சூட் எடுக்கணும் அப்படின்னு சொல்றாங்க .உடனே முத்து சொல்றாரு அதுக்கான சாரி எல்லாம் நான் போய் வாங்கிட்டு வரேன் அப்படின்னு சொல்ல ஆல்ரெடி என்கிட்ட இருக்கு அத வச்சு நாம பண்ணிடலாம்னு சொல்லி சுருதி மீனாவுக்கு மேக்கப் பண்ணி விடுறாங்க ..முத்துவும் பார்த்துட்டு மீனா அந்த ஹேர் ஸ்டைல் உனக்கு சூப்பரா இருக்குன்னு பாராட்டுறாரு .
இப்ப ரெண்டு பேருமே போட்டோ எடுத்துகிறாங்க .. அதோட ஸ்ருதி விளம்பரத்துக்காக டயலாக் எல்லாம் சொல்லிக் கொடுக்குறாங்க அது மாதிரியே மீனாவும் பேசி அசத்திறாங்க .இந்த பக்கம் ரோகினி ஷோரூம்ல உக்காந்து யோசிச்சிட்டு இருக்காங்க அந்த டைம்ல சிட்டி கால் பண்ணி அந்த பி எ வோட நிலைமை ரொம்ப மோசமாயிட்டே போகுது பணம் எப்ப கிடைக்கும் ஏதாவது ஒன்னு ஆச்சின்னா உங்க வீட்டு முன்னாடி போயிட்டு உங்கள கை காட்டிட்டு போயிட்டே இருப்பேன் அப்படின்னு சொல்லி மிரட்டுராறு . ரோகினிக்கு விஜயா ஓட அந்த ரெண்டு லட்சம் பணம் நினைவுக்கு வருது வேற வழியே இல்ல அதை எடுத்துற வேண்டியதுதான் அப்படின்னு மனசுல நினைச்சுக்கிட்டு இப்ப கிளம்புறாங்க. விஜயாவும் பார்வதி வீட்ல டான்ஸ் கிளாஸ் சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க .இப்போ ரோகிணி சாப்பாடோட போறாங்க .
ரோகிணியை புகழும் விஜயா ;
ஆன்ட்டி என்னோட கிளைன்ட் வீட்டுல ஒரு ஃபங்சன் அங்க போயிருந்தேன் உங்கள பத்தி பெருமையா சொல்லிட்டு இருந்தேன் அவங்களுக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போயிருச்சு அதனால கொஞ்சம் ஸ்னாக்ஸ் எல்லாம் குடுத்துட்டு இருக்காங்க அப்படின்னு சொல்லி சாப்பிட சொல்றாங்க. பார்வதியும் விஜயாவும் சூப்பரா இருக்குதுன்னு சாப்பிட்டு இருக்காங்க. இந்த டைம்ல ரோகினி போன்ல பேசுற மாதிரியே ஆக்ட் பண்ணிட்டு மாடிக்கு போறாங்க .அங்க விஜயாவோட ரெண்டு லட்சம் பணத்தை எடுத்து அவங்க பேக்ல வைக்கிறாங்க .போன்ல பேசுற மாதிரியே மெயின்டன் பண்ணிட்டு கீழ வராங்க ஆண்ட்டி இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க ஆண்ட்டி அப்படின்னு நல்லாவே நடிக்கிறாங்க. இதெல்லாம் தெரியாம விஜயா பார்வதியும் சாப்பிட்டுட்டு இருக்காங்க. பார்வதி சொல்றாங்க உனக்கு இருக்கிற மூணு மருமகள்லையே உன்னோட செல்ல மருமக ரோகிணி தானே அப்படின்னு கேட்க அதற்கு விஜயா சொல்றாங்க ஆமா.. என்னோட செல்ல மருமகள் ரோகிணி தான்..
இன்னொருத்தி இருக்கா அவள பத்தி எனக்கு பேசவே பிடிக்கல ..அந்த சுருதி சரியான பணக்கார பைத்தியம்.. ஆனா என் மேல பாசமா இருக்கிறது ரோகிணி தான் அப்படின்னு சர்டிபிகேட் கொடுக்குறாங்க.. எனக்கு பொண்ணு இல்லாத குறையா இவ தான் தீர்த்து வைக்கிறா ரொம்ப புகழ்ந்து தள்ளிடுறாங்க.. இப்போ வீட்ல மீனா கேட் வாக் பண்ணிட்டு இருக்காங்க அந்த டைம்ல விஜயா ரோகினி மனோஜ் மூணு பேருமே வராங்க ..இதோட இன்னைக்கு எபிசோட முட்டுச்சுருக்காங்க .. நாளைக்கு ப்ரோமோல பார்வதி விஜயா கிட்ட இரண்டு லட்சம் பணத்த காணோம் அப்படின்னு சொல்றாங்க ..இதை கேட்ட விஜயா அந்த மீனாதான் எடுத்திருப்பா அவ குடும்பமே ஒரு திருட்டு குடும்பம் அப்படின்னு சொல்றாங்க.. அவ உன் மருமக விஜயா அப்படின்னு பார்வதி சொல்றாங்க..