“போலி முகமூடி அணியும் தனுஷ்”…நயன்தாரா அதிரடி குற்றச்சாட்டு! நடந்தது என்ன?

ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என தனுஷ் மீது குற்றச்சாட்டு வைத்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

dhanush sad nayanthara

சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா தனுஷ் தன்னை பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கையை வெளியீட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், இருவருக்கும் இடையே என்ன பிரச்சினை ஏற்பட்டது என்பது குறித்தும் நயன்தாரா விளக்கமாக கூறியிருக்கிறார்.

என்ன பிரச்சினை?

இருவருக்கும் இடையே பிரச்சினை வருவதற்கான காரணமே நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை பயன்படுத்த தனுஷ் அனுமதி அளிக்கவில்லை என்பதற்காக தான். ஏனென்றால், நானும் ரவுடி தான் படத்தை நடிகர் தனுஷ் தான் தயாரித்து இருந்தார். ஆடியோ உரிமையையும் அவருடைய நிறுவனம் தான் வங்கியிருந்தது. எனவே, அவரிடம் தான் படத்திற்கான உரிமைகள் உள்ளது.

இந்த சூழலில், நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோவில் நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடலை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் தர முடியாது என மறுத்துள்ளார். அந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தான் இயக்கி பாடல்களை எழுதி இருந்தார்.

எனவே, தன்னுடைய கணவர் எழுதிய அந்த பாடல் தன்னுடைய திருமண வீடியோவில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் படத்தில் இடம்பெற்ற பாடல்களை பயன்படுத்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷிடம் நயன்தாரா மற்றும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் அனுமதிகேட்டுள்ளனர். ஆனால், தனுஷ் அனுமதி வழங்கவில்லை. எனவே, கடந்த 2 ஆண்டுகளாக தனுஷின் அனுமதிக்கு காத்திருந்ததாகவும்  நயன்தாரா வேதனையுடன் இப்போது வெளிப்படையாக பேசி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

நயன்தாரா குற்றச்சாட்டு

நானும் ரவுடி தான் படத்தின் பாடல்களை கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம், இதயத்திலிருந்து எழுதப்பட்ட அதன் வரிகள். ஆனால், அந்த வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும்.

சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் Legal Notice அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ.10,00,00,000 (பத்து கோடி) நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது.

கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.

‘நானும் ரௌடிதான்’ வெளியாகி 10 ஆண்டுகளை கடந்த பின்பும், உங்களது இழிவான செயல்களை மறைக்கும் வகையிலான போலியான முகமூடியை அணிந்துகொண்டு உங்களால் வலம் வர முடியும். ஆனால், தயாரிப்பாளராக பெரும் வெற்றியைக் கொடுத்த, ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படத்திற்கு எதிரான உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது” என தனுஷ்  மீது வெளிப்படையாக குற்றச்சாட்டை முன் வைத்து நயன்தாரா அறிக்கையில் பேசியுள்ளார்.

சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு தயார்

சட்டப்பூர்வமான உங்களது நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நாங்களும் தயராகவே இருக்கிறோம். ‘நானும் ரௌடிதான்’ படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான Copywright காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள்” எனவும் நயன்தாரா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்