வசூலில் மிஞ்சிய கங்குவா! ஆனாலும் கெத்து காட்டும் அமரன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தின் முதல் நாள் வசூலை கங்குவா திரைப்படம் முறியடித்துள்ளது.
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே கலவையான விமர்சனங்களைத் தான் பெற்று வருகிறது. விமர்சனங்கள் அப்படி வந்தாலும் கூட படத்திற்கு வசூல் ரீதியாக முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்தது என்றே சொல்லலாம். ஏனென்றால், உலகம் முழுவதும் படம் 58 கோடி வசூல் செய்திருந்ததாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
அமரன் வசூலை முறியடித்த கங்குவா
இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படங்கள் பட்டியலில் கோட் படம் தான் முதலிடத்தில் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து உள்ளது. அடுத்ததாக வேட்டையன் 78 கோடி வசூல் செய்திருந்தது. அதன்பிறகு தீபாவளிக்கு வெளியான அமரன் படம் முதல் நாளில் 42 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்திலிருந்தது.
இந்த சூழலில், அந்த வசூலை உடைத்தெறியும் வகையில், கங்குவா படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 58 கோடி வசூல் செய்து இந்த ஆண்டு முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
கெத்து காட்டும் அமரன்
முதல் நாள் வசூலில் வேண்டுமானால் கங்குவா படம் அமரன் முதல் நாள் வசூலை முறியடித்து இருக்கலாம். ஆனால், அமரன் படம் வெளியாகி 3 வாரங்கள் கடத்தும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக கங்குவா படத்தின் இரண்டாவது நாள் டிக்கெட் புக்கிங்கை விட அமரன் படத்திற்கு 3-வது வாரத்தில் அதிகமானோர் டிக்கெட் புக்கிங் செய்துள்ளனர்.
அதாவது கங்குவா படம் வெளியாகி இரண்டாவது நாளான நேற்று Book my show-வில் 114.88 பேர் டிக்கெட் புக்கிங் செய்துள்ளனர். அதே சமயம், அமரன் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் நேற்று 114.99பேர் படத்தைப் பார்க்க டிக்கட் புக் செய்துள்ளனர். ஏற்கனவே, அமரன் உலகம் முழுவதும் 270 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இருப்பினும் இப்போது படத்திற்கு இன்னுமே வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது