Live : சபரிமலை ஐயப்ப பக்தர்கள் முதல்., ஆளுநர் மாளிகை சர்ச்சை வரை…
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியது முதல், ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவர் புகைப்படம் காவி உடையில் அச்சடிக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கியது வரை பல்வேறு செய்திகளை கிழே காணலாம்.
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத வழிபாடுகளை தொடங்கினர். இன்று விரதத்தை தொடங்கும் ஐயப்ப பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து மண்டல பூஜை அல்லது மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வர் செல்வர்.
ஆளுநர் மாளிகையில், நடைபெறும் சர்வதேச கருத்தரங்கு நிகழ்வு ஒன்றிற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் திருவள்ளுவர் காவி உடை அணிந்து இருப்பது போல அச்சடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.