தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது. இந்த திருத்த பணிகள் வருகிற நவம்பர் 28ஆம் தேதி வரை நடைபெறும்.
2025 ஜனவரி 1 வரை, வாக்களிக்க தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர், முகவரி, தொகுதி, பாகம் உள்ளிட்டவற்றை திருத்த தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு முகாம் மூலம் பொதுமக்கள் தங்கள் பெயர் மற்றும் குடும்பத்தினர் பெயர் விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா? என்பதை சரிபார்த்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், திருத்தம் ஏதேனும் மேற்கொள்ள விரும்புவோர், இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த முகாமுக்கு சென்று என்னென்ன திருத்த செய்ய வேண்டும் என்பதை, அதற்கான படிவத்தில் குறிப்பிட்டு புகைப்படம், முகவரி சான்று நகல் உள்ளிட்டவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபின் உங்களுக்கான புதிய வாக்காளர் அட்டையை-ஐ தேர்தல் ஆணையம் வழங்கும். மேலும், http://voters. eci,gou. என்ற இணையதளம் மூலமாகவும் பெயர்கள் , நீக்கவும், திருத் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம்.