திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் வெகு விமர்சையாக திருக்கார்த்திகை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை –தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது திருக்கார்த்திகை தினமாக கொண்டாடப்படுகிறது . இந்த கார்த்திகை தீபம் மூன்று நாட்கள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.இந்த வருடம் கார்த்திகை மாதம் 28ஆம் தேதி டிசம்பர் 13 2024 அன்று வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை கொண்டாட படுகிறது .அதிலும் குறிப்பாக திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் வெகு விமர்சையாக திருக்கார்த்திகை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிசம்பர் 1ம் தேதி கார்த்திகை 16 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை துர்க்கை அம்மன் உற்சவத்துடன் துவங்க உள்ளது .டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது .இதனைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு காலை மற்றும் இரவு பஞ்ச மூர்த்திகள் மாட வீதி விழா நடைபெறும் . டிசம்பர் எட்டாம் தேதி வெள்ளி ரிஷப வாகனமும், டிசம்பர் 9ஆம் தேதி வெள்ளித்தேர் பவனி வைபவமும் ,டிசம்பர் 10ஆம் தேதி மரத்தேரும் நடைபெற உள்ளது. டிசம்பர் 13ஆம் தேதி காலை நான்கு மணிக்கு கோவிலில் பரணி தீபமும் அன்றைய தினம் ஆறு மணிக்கு திருவண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.