“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

விஜய் ஹிந்தி படிக்க வேண்டாம், மும்மொழிக் கொள்கை வேண்டாம் என எப்படி சொல்ல முடியும் ? என சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

sarathkumar

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும் அரசியல் தலைவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. அப்படி தான் தற்போது நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சரத்குமார் தலைமையில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சமத்துவ விருந்தில் 300 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விருந்து வழங்கிய முடித்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவரும் பதில் அளித்துள்ளார்.

அப்போது தான் செய்தியாளர் ஒருவர் “விஜய் அரசியல் வருகை பற்றி உங்களுடைய கருத்து என்ன? எனக் கேட்டார்” அந்த கேள்விக்குப் பதில் அளித்த சரத்குமார் ” நான் முன்பே சொல்லிவிட்டேன். மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கில் யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எனவே, அந்த எண்ணத்தில் விஜய் அரசியலுக்கு வருகை தந்து இருப்பது வரவேற்கத் தக்க விஷயம்” எனப் பதில் அளித்தார்.

அதனைத்தொடர்ந்து மற்றொரு செய்தியாளர் மாநாட்டில் திராவிடமும், தமிழ்த்தேசமும் ஒன்று எனக் கூறியதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? எனக் கேள்வி கேட்டனர். அந்த கேள்விக்குப் பதில் அளித்த அவர் ” கண்டிப்பாக விஜய் அப்படிக் கூறியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கொள்கை அடிப்படையில் பேசி நான் அவரை விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

ஏனென்றால், அவர் இப்போது தான் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். போகப் போக தான் அவருடைய கொள்கை என்னவென்று நமக்குத் தெரியும். கட்சி தொடங்கியதைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாகப் பல கூட்டங்களை நடத்தி பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து அடுத்ததாக என்ன செய்யப்போகிறோம் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் ” எனவும் சரத்குமார் கூறினார்.

அதனைத் தொடர்ந்து மத்திய , மாநில அரசுகளை விஜய் விமர்சனம் செய்து பேசியுள்ளார். அது பற்றி உங்களுடைய கருத்து என்ன? எனக் கேட்டனர். அதற்கும் பதில் அளித்த சரத்குமார் ” ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு யாரையாவது தாக்கி பேசினால் தான் அரசியலில் பயணிக்கமுடியும் என்று எல்லாரும் நினைக்கிறார்கள்” என விஜய் அதனால் தான் மத்திய , மாநில அரசுகளைப் பேசியதாக சரத்குமார் சூசகமாகக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய சரத்குமார் ” விஜய்யை போல நானும் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது தான் அரசியலுக்கு வந்தேன். மக்களுக்கு எதாவது சேவை செய்யவேண்டும் என்று தான் அரசியலுக்கு வந்து பெரிய பெரிய தலைவர்களையும் எதிர்த்தேன். பொறுப்புடன் இருக்கவேண்டும் என்ற காரணத்தால் தான் பாஜகவில் இணைந்தேன். பொறுப்புக்காக இணையவில்லை” எனவும் சரத்குமார் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்