எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!
ஐபிஎல் 2025 இல் யுவராஜ் சிங்கை அவர்களின் பேட்டிங் பயிற்சியாளராக நியம்மிக்க பஞ்சாப், கொல்கத்தா உட்பட மூன்று அணிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அவர்களுடைய காத்திருப்புக்குப் பலன் கிடைக்கும் விதமாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் யுவராஜ் சிங் பயிற்சியாளராக களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி அவரை தங்களுடைய அணிக்குப் பயிற்சியாளராக நியமிக்க 3 அணிகள் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னென்ன அணிகள் என்பது பற்றி இந்த செய்திக்குறிப்பில் நாம் பார்ப்போம்…
பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் மற்ற அணிகளை விடக் கையில் இருப்புத் தொகை அதிகமாக வைத்துள்ள காரணத்தால் வீரர்களைத் தான் செலவு செய்து எடுக்கப்போகிறது என்று பார்த்தால் அனுபவம் வாய்ந்த யுவராஜ் சிங்கை தங்களுடைய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. யுவராஜ் சிங் 2008–2010, 2018 ஆகிய ஆண்டுகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முனாஃப் படேல் சமீபத்தில் நியமிக்கப்பட்டார் . அவரை தொடர்ந்து அணி பேட்டிங் பயிற்சியாளரைத் தேடிக்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, யுவராஜ் சிங்கை தங்களுடைய அணிக்குக் கொண்டு வர அணி நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், யுவராஜ் சிங் கடந்த 10125-ஆம் ஆண்டு விளையாடினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில், சந்திரகாந்த் பண்டிட் தற்போது பயிற்சியாளராக பணியாற்றுகிறார்.அவரை மாற்றிவிட்டு இந்த முறையும் கோப்பையை வெல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி திட்டமிட்டு இருக்கிறது. எனவே, யுவராஜ் சிங்கை குறி வைத்து அவரை அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்னும் எந்த அணிக்கு யுவராஜ் சிங் எந்த அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராகப்போகிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.