கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..
திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை –திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
- வெல்லம் =முக்கால் கப்
- பச்சரிசி=1 கப்
- துருவிய தேங்காய்= 2 ஸ்பூன்
- ஏலக்காய் =அரை ஸ்பூன்
- பழுத்த வாழைப்பழம்= ஒன்று
செய்முறை;
பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து சூடாக்கி கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது ஊற வைத்துள்ள அரிசியை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தையும் ஆற வைத்து அரைக்கும் பச்சரிசி மாவுடன் சேர்த்து சிறிது சிறிதாக சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளவும்.
இப்போது அதனுடன் வாழைப்பழத்தை நறுக்கி சேர்த்து, அரை ஸ்பூன் ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் ஆகியவற்றையும் சேர்த்து ஒரு சுத்து விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும் .மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். இப்போது தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய வைத்துக் கொள்ளவும் .எண்ணெய் காய்ந்தவுடன் மிதமான தீயில் வைத்துக்கொண்டு ஒரு குழி கரண்டியில் மாவை எடுத்து ஊற்ற வேண்டும் பிறகு அதனை இருபுறமும் மிதமான தீயில் பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால் அப்பம் தயாராகிவிடும்.