நியூஸிலாந்து பார்லிமென்ட்டில் நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில், மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் எம்பியான ஹனா-ரவ்ஹிதி கரேரிகி பழங்குடி நடனம் ஆடி எதிர்ப்பு தெரிவித்தார்.

Newzeland MP Dance

வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது உலக அளவில் அவர் மீது கவனத்தை ஈர்க்க செய்துள்ளது.

மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த பெண் பார்லிமென்டில் ஹக்கா எனப்படும் மாவோரிகளின் நடனம் ஆடி எதிர்ப்பை தெரிவித்தார். நியூசிலாந்து அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வைதாங்கி உடன்படிக்கையில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வருவதற்காக நியூஸிலாந்தின் ஆளும் கூட்டணியான ACT கட்சி முன்மொழிந்தது.

இதற்கு வாக்கெடுப்பிற்கு நேற்று நியூஸிலாந்து பார்லிமென்டுக்கு அழைப்பு விடுத்தது. அதன் படி நேற்று வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்ட வர வாக்கெடுப்பும் நடைபெற்றது.

அப்போது, நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடிகளான மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பியான ஹனா-ரவ்ஹிதி, மாவோரிகளின் நடனம் ஆடி அந்த மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

பார்லிமென்டில் அவர் ஆடிய நடனம் ஆடும் பொழுது, அந்த அரங்கம் மொத்தமும் அதிர்ந்தது. இது தொடர்பான வீடியோ சமூகத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு எம்பி இப்படி எதிர்ப்பை தெரிவித்தது அந்த நாடு முழுவதும் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்