சிறகடிக்க ஆசை சீரியல்-விஜயாவிடம் மன்னிப்பு கேட்கும் சத்யா..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம்  உண்மையை கூறும் தருணம்..

Rohini,vijaya (3) (1)

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம்  உண்மையை கூறும் தருணம்..

விஜயாவிடம் மன்னிப்பு கேட்க்கும்  குடும்பம் ;

ரோகினி வித்யா கிட்ட ஆண்ட்டி எப்படி கேச வாபஸ் வாங்கினாங்கன்னு  பேசிட்டு இருக்காங்க .அந்த டைம்ல சிட்டி கால் பண்றாரு. என்ன ரோகினி  பணம் ரெடி ஆயிடுச்சான்னு கேக்க அதுக்கு ரோகிணி சொல்றாங்க ட்ரை பண்ணிட்டே இருக்கேன் அப்படின்னு சொல்றாங்க . அதுக்கு சிட்டி சொல்றாரு லேட் பண்ண லேட் பண்ண அவரோட கண்டிஷன் மோசமாயிட்டே இருக்குது கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணுங்கனு   சொல்றாரு. இப்போ மீனா அவங்க  அம்மா குடும்பத்தோட விஜயாவை பார்க்க போறாங்க.. எல்லாருமே விஜயா கிட்ட மன்னிப்பு கேக்குறாங்க.. ஆனாலும் விஜயா அவமானப்படுத்தி பேசுறாங்க.. நீங்க இத முன்னாடியே செஞ்சிருந்தா அந்த வக்கீல் கிட்ட நாங்க அஞ்சு லட்சம்  கொடுக்காமல் இருந்துருப்போம்  அப்படின்னு முத்து சொல்ல இதை கேட்ட விஜயா அந்த வக்கீல் 5 லட்சம் வாங்கிருந்தானா நம்ம நாலு லட்சம் கேட்டிருக்கலாம் அப்படின்னு யோசிச்சிட்டு இருக்காங்க..

vijaya (18) (1)

இப்போ சத்யா அத்தை என்னை மன்னிச்சிருங்க அப்படின்னு சொல்றாரு. அதுக்கு விஜயா  பேசாம இருக்குறாங்க.. சரி சத்யா நீ மன்னிப்பு கேட்ட இல்ல  கெளம்பு அப்படின்னு முத்து அனுப்பி வைக்கிறார்.. மீனா அத்த வீட்டுக்கு வாங்க அப்படின்னு கூப்பிடுறாங்க.. விஜயா  சொல்றாங்க நான் வர முடியாது என்ன மதிக்காத வீட்டுக்கு நான் வரமாட்டேன் அப்படின்னு சொல்றாங்க. அதுக்கு முத்து பார்வதி கிட்ட அத்தை அப்பாவோட பிரண்டு வைஃப் கூட சண்டையாம்  இப்போ டைவைஸ்  பண்ணிட்டாங்க அவங்கள பார்க்கறதுக்கு ஊருக்கு போறாங்க.. இப்படியே போனா அப்பாவும் என்ன முடிவு எடுப்பார்னு  தெரியலை  அப்படின்னு சொல்றாரு .இதைக் கேட்ட பார்வதி விஜயா  உனக்கும் இந்த நிலைமை வந்துரும் போலயே அப்படின்னு சொல்ல விஜயா யோசிக்கிறாங்க.. இப்போ மீனா முத்து  கிட்ட ஏன் அப்படி சொன்னீங்க அப்படின்னு கேட்க சும்மா கொளுத்தி போட்டேன் மீனா. ஒருவழியா விஜயா வீட்டுக்கு வராங்க..

ரவியிடம் மாட்டிக்கொள்ளும் விஜயா ;

முத்து மீனவ ஆரத்தி எடுத்து வரவேற்க சொல்றாங்க.. இப்போ அண்ணாமலை எப்படி நீ கேச வாபஸ் வாங்குன ஒரே பிடிவாதமா இருந்தியே அப்படின்னு கேக்க  அதுக்கு விஜயா சமாளிக்கிறாங்க.. அவங்க வீட்ல இருந்து எல்லாருமே வந்து என்கிட்ட மன்னிப்பு கேட்டாங்க அதானு  சொல்லுறாங்க.  உடனே ரவி  நீங்க வாபஸ் வாங்கின பின்னாடி தானே அவங்க மன்னிப்பு கேட்டாங்க அப்படின்னு சொல்ல மனோஜ் யோசிக்கிறாரு ஆமா இல்ல அப்படின்னு.. இப்ப என்ன நான் வந்தது உங்களுக்கு பிடிக்கலையா அப்படின்னு விஜயா  கேக்குறாங்க.. உடனே முத்து சரி விடுங்க அப்படின்னு சொல்லுறாரு  இதோட இன்னைக்கு எபிசோடு முடிச்சு இருக்காங்க .நாளைக்கு ப்ரோமோல ரோகிணி பார்வதி வீட்டில பார்வதிக்கு மசாஜ் செஞ்சுக்கிட்டே  ஆண்ட்டி எப்படி மனசு மாறினாங்கன்னு கேட்க , அதற்கு பார்வதி உண்மைய உளரிறாங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Priyanka Gandhi - Wayanad
vijay tvk
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray