காலை 10 மணி வரை சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்து வருகிறது. இதனால், கடந்த 3 நாள்களாகவே பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது.
குறிப்பாக இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, இன்றைய தினம் 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 14, 2024