நவகிரக பாதிப்பை விலக்கும் கார்த்திகை மாதம் .. சிறப்புகள் என்ன தெரியுமா?

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் ,கார்த்திகை மாதத்தில்  செய்யும் தானங்களின் சிறப்புகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

karthikai special (1)

சென்னை –கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் ,கார்த்திகை மாதத்தில்  செய்யும் தானங்களின் சிறப்புகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் ;

கார்த்திகை மாதம் கருமையான மேகங்களை கொண்டு அதிக மழை பொழியும் கார்காலமாகும். இந்த மாதத்தில் காந்தள்  மலர்கள் அதிகம் மலரும் என கூறப்படுகிறது. இந்த கார்த்திகை மாதத்தின் 30 நாட்களும் அதிகாலை நீராடி சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சகலவித நன்மைகளும் மகிழ்ச்சிகளும் கிடைக்கும் என்பது அதிகமாக உள்ளது .கார்த்திகை மாதம் விளக்கு தானம் செய்வதால் பிரம்மகத்தி தோஷம் விலகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யால்  அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தினால் அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கார்த்திகை மாதம் நம் உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும் ,அதனால் தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது .கார்த்திகை மாதம் பௌர்ணமியில் சந்திரன் முழுமையாக இருப்பதால் ஆறு ,ஏரி ,குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றலை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கார்த்திகை திருநாள் கொண்டாடபடும் மாதமாகவும்  அன்று நெல் பொரியை சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக படைத்தால் அவரின் பரிபூரண அருளும் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது .

கார்த்திகை ஞாயிறு;கார்த்திகை ஞாயிறு கார்த்திகை மாதத்தின் சிறப்பாக போற்றப்படுகிறது. கார்த்திகை முதல் ஞாயிறு துவங்கி 12 ஞாயிறுகள் நவகிரக மூர்த்திகள் விரதம் மேற்கொண்டு வரம் பெற்றதாக ஐதீகம் .அதனால் இந்த கார்த்திகை ஞாயிறு விரதத்தை மேற்கொண்டால் நவகிரகத்தின் பாதிப்பு விலகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது.

கார்த்திகை திங்கள் சோமவார விரதமாக மேற்கொள்ளப்படுகிறது. இது சிவபெருமானின் அருள் கிடைக்க செய்யும். கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பாக கூறப்படுகிறது. குறிப்பாக துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி போன்ற திதிகளில் ஆவது விளக்கேற்றி வழிபட வேண்டும்.

கார்த்திகை மாதத்தின் மிகச்சிறந்த சிறப்பாக திருவண்ணாமலை திருக்கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் தேவர்களும் ரிஷிகளும், முனிவர்களும் வலம் வருவதாக ஐதீகம். குறிப்பாக இந்திரன், வருணன், வாயு பகவன், குபேரன், எமதர்மராஜா வலம் வருவதாக கூறப்படுகிறது. இந்த திருநாளில் கிரிவலம் செல்வது மிக சிறந்ததாக கூறப்படுகிறது.

விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்து வந்தால் மோட்சம் கிடைக்கும் .விஷ்ணு பகவான் கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு அடுத்த நாள் மலர்ந்ததாக புராணங்கள் கூறுகின்றது .மகாவிஷ்ணு நெல்லி மரமாக தோன்றியவர் என்பதால் ஏகாதசி அன்று துளசி செடியுடன் நெல்லி மரத்தின் கிளையை ஊன்றி பூஜை செய்து துளசி கல்யாணம் செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு  விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

அதேபோல் கார்த்திகை பஞ்சமி அன்று நாக தோஷம் நிவர்த்தி செய்ய உகந்த நாளாகவும் கூறப்படுகிறது .கார்த்திகை மாத ஏகாதசி ராம ஏகாதசி என்றும் மிகச் சிறப்பானது என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி 11 முறை பெருமாளின் கோவிலை வலம் வருவதால் ஆரோக்கியம், மனம் நிம்மதி ,செல்வ செழிப்பான வாழ்க்கை கிடைக்கும்.

கார்த்திகை மாத தானங்களும், அதன் சிறப்புகளும்;

கார்த்திகை மாதத்தில் வரும் துவாதசி அன்று அன்னதானம் செய்தால் கங்கை கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் .நெல்லி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும் .அதேபோல் கார்த்திகை மாதத்தில் விளக்கு , பழங்கள், தானியங்கள் ,வெண்கல பாத்திரங்கள் தானம் செய்தால் செல்வம் பெருகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்