நாளை வாக்குப்பதிவு எங்கெல்லாம்? : வயநாடு முதல் ஜார்கண்ட் வரை!!
நாளை (நவ.-12) இந்தியாவில் ஒரே நேரத்தில் வயநாட்டில் இடைத்தேர்தல் அதே நேரம் ஜார்கண்டில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது.
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
ஜார்கண்ட் தேர்தல் :
81 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய ஜார்கண்ட் மாநிலத்தில் நவ-13 மற்றும் 20-இல் இரண்டு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் வரும் நவ-20ம் கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜார்கண்ட்டில் ஜே.எம்.எம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இதனால், தொடர்ந்து ஆட்சியை அமைக்க ஜே.எம்.எம்-காங்கிரஸ் கூட்டணியும், பாஜகவும் கடுமையான போட்டியிலிருந்து வருகிறது.
வயநாடு இடைத்தேர்தல் :
மக்களவை தேர்தலில் வயநாடு மற்றும் ரேபலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தலைவர் ராகுல் காந்தி. அதன்பின் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தற்போது அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்தியன் மொகேரி, பாரதிய ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில், பிரியங்கா காந்திக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், நேற்று பிரியங்கா காந்தி தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்றுடன் பிரத்தத்திற்கான நேரம் முடிந்த நிலையில் நாளை (13-11-2024) தேர்தல் நடைபெறவிருக்கிறது.