“நான் 30 நாள்…சிவா 90 நாள் தூங்கவில்லை”..கங்குவா குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!!

கங்குவா படம் நவம்பர் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி இன்று மும்பையில் நடைபெற்றது.

gnanavel raja siva kanguva

மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும் நம்புகிறது. அதன் காரணமாகத் தான் பல கோடிகள் செலவு செய்து படத்தை மும்பை, டெல்லி. ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று ப்ரோமோஷன் செய்தும் வருகிறது. படத்தைப் படத்தில் நடித்தவர்கள் அதிகம் நம்புவதை விட ஒரு படி மேலாகப் படத்தைத் தயாரித்த ஞானவேல் ராஜா மிகவும் நம்புகிறார் என்றே சொல்லலாம்.

குறிப்பாக, படத்தின் மீது இருக்கும் அதிகம் நம்பிக்கை காரணமாக கங்குவா படம் உலகம் முழுவதும் 1000 கோடிகள் வசூல் செய்யும் எனவும், படத்தின் முதல் பாகத்துடன் மோத எந்த படம் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் இரண்டாவது பாகம் வெளியாகும்போது யாரும் படத்துடன் மோத வரமாட்டார்கள்” என அந்த அளவுக்கு கங்குவா அருமையாக இருக்கும் என ஞானவேல் ராஜா தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அதனைத்தொடர்ந்து தற்போது மும்பையில் நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ளதால் 90 நாட்கள் சிறுத்தை சிவா 90 நாட்கள் தூங்கவில்லை எனவும், நான் 30 நாட்களுக்கு மேல் தூங்கவில்லை” எனவும் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர் ” கங்குவா படத்திற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கடினமாக வேலை செய்து இருக்கிறோம். இயக்குநர் சிறுத்தை சிவா 90 நாட்கள் தூங்கவில்லை. நான் 30 நாட்களாகத் தூங்கவில்லை. புயலுக்குப் பின் அமைதி என்று சொல்வார்கள். எனவே, கங்குவா புயல் வந்த பிறகு கண்டிப்பாக உங்களுடைய மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தும்” எனவும் ஞானவேல் ராஜா தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா ” கங்குவா படத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. நவம்பர் 14-ஆம் தேதி நீங்கள் வைத்த எதிர்பார்ப்பு அனைத்தையும் படம் பூர்த்தி செய்யும். ஒருவரைச் சந்தோஷம் செய்து பார்ப்பது தான் மிகவும் மகிழ்ச்சியான ஒரு செயல். கண்டிப்பாக, கங்குவா படம் அதனைச் செய்யும்” எனவும் ரசிகர்களுக்கு கங்குவா கண்டிப்பாக ட்ரீட்டாக இருக்கும் என்பதை சூர்யா சூசகமாகக் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்