பெண் வேடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ….!குவியும் பாராட்டு …!
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பெண் போல வேடம் அணிந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
டெல்லியில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கவுதம் கம்பீர் பெண் போல துப்பாட்டா அணிந்து, பொட்டு வைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.இந்நிலையில் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.மேலும் கவுதம் கம்பீருக்கு பாராட்டுக்கள் குவிந்து வண்ணமே உள்ளது.