வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகியுள்ளது.

tn rain news

சென்னை : நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (11-11-2024) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும்,  இது அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என முன்னதாக வானிலை மையம் தகவல் தெரிவித்து இருந்தது.

இதனையடுத்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது எனவும் அடுத்த இரண்டு நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகரும் எனவும் இதன் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கடற்கரை நோக்கி நகர்வதால் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதைப்போல, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்