மீண்டும் விஜயை சீண்டிய சீமான்! “நான் அதுல பாதி, இதுல பாதி இல்லை”

நான் அதுல பாதி இதுல பாதி இல்லை. எனது அரசியல் தமிழ் தேசியம் பேசும் அரசியல் என தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டியளித்துள்ளார்.

NTK Leader Seeman - TVK Leader Vijay

தூத்துக்குடி : தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில், அக்கட்சி தலைவர் விஜய் பேசுகையில், திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என்று பேசியிருந்தார். அவரது இந்த கருத்தை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக எதிர்த்தார்.

தமிழ் தேசியமும் , திராவிடமும் ஒன்றல்ல. விஷமும், விஷ முறிவு மருந்தும் ஒன்றா.? பெண்ணியம் பேசும் திராவிடம், பெண்ணிய உரிமை கொடுக்கும் தமிழ் தேசியம் என்றும் பல்வேறு விளக்கங்களை ஆவேசமாக கூறினார் சீமான்.  மேலும், ஒன்னு ரோட்டுக்கு அந்தப்பக்கம் நிக்கணும், இல்ல இந்தப்பக்கம் நிக்கணும் நடுவில் நின்றால் லாரி அடித்துவிடும் என்றெல்லாம் விஜயை கடுமையாக விமர்சித்தார் சீமான்.

இபப்டியான அரசியல் சூழலில் அண்மையில் சீமான் பிறந்தநாளன்று, ‘சகோதரர்’ சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டார் தவெக தலைவர் விஜய். அதற்கு சீமானும், நன்றி தெரிவித்து பதிவிட்டு இருந்தார். இதனால் இருவருக்கும் இடையேயான கொள்கை முரண்கள்  சரியாகிவிட்டது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

ஆனால், இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், மீண்டும் விஜயை மறைமுகமாக சாடி விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழ் மகன் ஆட்சிக்கு வரும்போது திமுகவின் அடையாளங்கள், ஆந்திரா , வங்கதேசத்தில் நடைபெற்றது போல அகற்றப்படும் என கடுமையாக விமர்சித்தார்.

அப்போது தமிழ்மகன் என யாரை கூறுகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், “ஏன் நானாக இருந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா ?” என சீமான் கேள்வி எழுப்பினர். மேலும், “நான் இதுல பாதி, அதுல பாதி இல்லை. எனது அரசியல் தமிழ் தேசிய அரசியல். என் தாய் நாடு தமிழ்நாடு, என் தேசியம் தமிழ் தேசியம். நல்ல தமிழ் தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்தவன் நான்.

தமிழ் கலாச்சாரம் காக்க வேண்டும். பெண்ணுரிமை போற்ற வேண்டும். இதுதான் தமிழ் தேசிய அரசியல்.  இதுபோல அதுல பாதி இதுல பாதி என இருப்பவர்களிடம் திராவிடம் என்றால் என்ன என்று கேளுங்கள். ” என தவெக தலைவர் விஜயை சீமான் மறைமுகமாக சீண்டி மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் அண்மையில் ஒரு நிகழ்வில் பேசுகையில், “திராவிடத்தில் இருந்து வந்த தமிழ் மொழி உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாக திகழ்கிறது என பிரபாகரன் கூறியுள்ளார். அவரே தமிழ் தேசியம் , திராவிடம் ஒன்று என்பது போல கருத்து கூறியுள்ளார் இதற்கு மேல் ‘திராவிடம் – தமிழ் தேசியம் ‘ பற்றி விவாதிக்க ஒன்றுமில்லை.” என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்