“இது வெறும் ட்ரெயிலர் தான்”.. சென்னைக்கான மழை அப்டேட் கொடுத்த பிரதீப் ஜான்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 15ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Chennai Rains

சென்னை : நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (11-11-2024) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில், இப்பொது திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. இது குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் சென்னைக்கான மழை அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னையில் இன்று சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகிறது. இது வெறும் ட்ரெயிலர் தான் இன்று இரவு மற்றும் நாளை காலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவான பிறகு தான் ஆட்டமே ஆரம்பிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று முதல் 15ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்