அரசு அதிகாரிகள் ,வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்…!
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தன்னுடைய நிலத்துக்குப் பட்டா வழங்க அரசு அதிகாரிகள் மறுப்பதாக ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016
ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள் ளார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு வெள்ளிக்கிழமை (செப்.14) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் சிறீஜெயந்தி, இந்த வழக்கிற்கு திரு
வள்ளூர் கோட்டாட்சியர், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யக் கால அவகாசம் கேட்டார். இதற்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்தார். பதில் மனு தாக்கல் செய்யாமல், அரசு அதிகாரிகள், வழக்கை இழுத்து அடிப்
பதை வேடிக்கை பார்க்க முடியாது என்றும் கூறினார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-
உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளில், அரசு தரப்பில் உரியக் காலத்தில் பதில் மனு தாக்கல் செய்வதே கிடையாது. உரிய ஆவணங்களையும், பதில் மனுவையும் தாக்கல் செய்து வழக்கை விரைவாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணம் அதிகாரிகளிடம் இல்லை. அதுமட்டுமல்ல, அரசு தரப்பில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்கள், பதில் மனு தாக்கல் செய்யாமல், வாய்தா வாங்குவதையே வாடிக் கையாக வைத்துள்ளனர். இதனால், வழக்கும் வழக்கம்போல் தள்ளிவைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற செயல்களில் கூட்டுச்சதி இருக்கலாம். ஏன் என்றால், குறிப்பிட்ட காலத்துக் குள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றால், உயர் நீதிமன்றமும் வழக்கின் தன்மையின் அடிப் படையில் தீர்ப்பு அளிக்கும். அதாவது, வழக்கில் பதில் மனுவை அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை என்பதால், வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ஒரு தலைபட்சமான (எக்ஸ் பார்ட்டி) தீர்ப்பு கிடைக்கும். இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. ஒரு வழக்கு என்றால், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அதைச் செய்யவில்லை என்றால், அரசியல் அமைப்புச் சட்டத்தின் படியான கடமையை அரசு நிறைவேற்றத் தவறி விட்டது என்பதாகி விடும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்ட விதி 3 ஏ-யின்படி, உயர் நீதிமன்றம் நோட்டீசு அனுப்பினால், 3 மாதங்களுக்குள் எதிர்தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று கூறுகிறது.இதை பின்பற்றாமல் இருப்பதை அரசு அதிகாரிகள் , வழக்கறிஞர்கள் வாடிக்கையாக்கியுள்ளனர் என்று கண்டனம் தெரிவித்தார் நீதிபதி.
DINASUVADU