சளி இருமலை விரட்டும் தூதுவளை ரசம்.. அசத்தலான சுவையில் செய்யும் முறை ..!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இருமல், நெஞ்சு சளியை விரட்டும் தூதுவளை ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை –நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இருமல், நெஞ்சு சளியை விரட்டும் தூதுவளை ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
- தூதுவளைக் கீரை= ஒரு கைப்பிடி அளவு
- தக்காளி =இரண்டு
- வரமிளகாய்= நான்கு
- புளி =நெல்லிக்காய் சைஸ்
- சீரகம்= ஒரு ஸ்பூன்
- மிளகு= ஒரு ஸ்பூன்
- பூண்டு= எட்டு பள்ளு
- தனியா =ஒரு ஸ்பூன்
- துவரம் பருப்பு =ஒரு ஸ்பூன்
- நெய் =ஒரு ஸ்பூன்
- பெருங்காயம் =அரை ஸ்பூன்
- கடுகு= அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன்.
செய்முறை;
தேவையான அளவு தண்ணீர் எடுத்து அதில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும். புளி ஊறிய பிறகு தக்காளி சேர்த்து இரண்டையும் கரைத்துக் கொள்ளவும். இப்போதும் மிக்ஸி ஜாரில் தனியா ,மிளகு ,சீரகம், துவரம் பருப்பு, வர மிளகாய் 1, பூண்டு ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும். பிறகு அதனுடன் கீரையையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். இப்போது இந்த விழுதை கரைத்து வைத்துள்ள தக்காளி புளித் தண்ணீரில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் கடுகு சேர்த்து பெருங்காயம் கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் ,வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து கரைத்து வைத்துள்ள அந்தக் ரச கலவையை சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து நுரை பொங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்து இறக்கினால் சுவையான சத்தான தூதுவளை ரசம் தயார்..