அதிபர் டிரம்ப்பின் முதல் கையெழுத்து! 10 லட்சம் இந்தியர்களின் கனவுக்கு ஆபத்து? காரணம் என்ன?
அதிபராக டிரம்ப் போடப் போகும் முதல் கையெழுத்தால் அமெரிக்காவில் வசிக்கும் 10 லட்சம் இந்தியர்களின் கனவுக்கு ஆபத்து இருப்பதாகக் கருதப்படுகிறது.
வாஷிங்டன் : உலகமே எதிர்பார்த்து இருந்த அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 295 மாகாணங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் காரணமாக அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் தேர்வாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டொனால்ட் டிரம்ப் ஜனவரி-25, 2025-ல் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராகப் பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில், அவர் அதிபராகப் பதவி ஏற்றால், அமெரிக்காவில் குடியுரிமை வேண்டி விண்ணப்பத்திற்கும் 10 லட்சம் இந்தியர்களின் கனவுக்கு ஆபத்து இருப்பதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களால் கூறப்படுகிறது.
சரித்திர வெற்றி :
அமெரிக்க அதிபராக 2-வது முறையாகத் தேர்வாகி இருக்கும் டிரம்ப்பின் இந்த வெற்றியானது அமெரிக்க வரலாற்றில் ஒரு சரித்திர வெற்றியாகும். அதாவது, அமெரிக்காவில் அதிபராக இருந்த ஒருவர் 2-வது தேர்தலில் தோல்வியடைந்து, அதன் பிறகு 3-வது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது அமெரிக்காவில் 132 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது.
இதற்கு முன்னதாக, அதாவது 132 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான குரோவர் கிளீவ்லேண்ட் (Grover Cleveland) 132 ஆண்டுகளாக வைத்திருந்தச் சாதனையை டொனால்ட் டிரம்ப் முறியடித்து ஒரு வரலாற்று வெற்றியை நிகழ்த்தியுள்ளார். குரோவர் 1885 ஆண்டு முதல் 1889 ஆண்டு வரையும், அதன் பின் அடுத்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
அதனைத் தொடர்ந்து நடந்த 3-வது தேர்தலில் போட்டியிட்டு 1893 முதல் 1897 வரை மீண்டும் அமெரிக்க அதிபராக பணியாற்றினார். இவரது இந்த தனிப்பட்ட சாதனையைத் தான், குடியரசு கட்சிச் சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் முறியடித்துள்ளார். இதனால் தான் இவரது இந்த வெற்றி அமெரிக்காவில் ஒரு சரித்திர வெற்றியாக மாறியிருக்கிறது.
ட்ரம்ப்பின் கொள்கை :
ட்ரம்ப் தான் எப்பொழுதுமே முதன்மையாகப் பார்ப்பது என்னவென்றால் அமெரிக்க நாடு அமெரிக்கர்களுக்கு மட்டும் தான். அமெரிக்காவில் வேறு எந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரும் வந்து தொழில் ரீதியாக எந்த ஒரு செயலையும் செய்வதையும் முற்றிலும் விரும்பாத நபர் தான் டிரம்ப்.
உதாரணமாக, இந்தியாவில் செயல்பட்டு வரும் ஐடி (IT) கம்பெனி அமெரிக்காவில் சென்று தொழில் செய்வதை அவர் விரும்பமாட்டார். அதற்கு மாறாக அமெரிக்காவில் ஐடி கம்பெனியைத் தொடங்கி, அங்குள்ள அமெரிக்கர்களுக்கு அவர் வேலைவாய்ப்பைக் கொடுப்பார் அதிலும், வேறு நாட்டைச் சேர்ந்த யாருக்கும் அனுமதி இருக்காது.
அவர் ஆட்சி செய்த அந்த 4 வருடத்திலும், தேவையின்றி பிற நாடுகளைப் பகைத்ததும் உண்டு. இதனால் தான், அவர் தற்போது அதிபராக வெற்றி பெற்றதால் அமெரிக்காவில் இருக்கும் பிற நாட்டு மக்கள் அச்சத்திலிருந்து வருகின்றனர்.
டிரம்ப்பின் முதல் கையெழுத்தும், இந்தியர்களின் கனவும் :
இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் சென்று பணிபுரிந்து, அங்கேயே குடியுரிமை வாங்கி, அங்கேயே செட்டில் ஆக வேண்டும் என நினைக்கும் இந்தியர்களின் கனவுக்கு டிரம்ப் இனி முற்றுப் புள்ளி வைப்பார் எனக் கூறப்படுகிறது. இனி எக்காரணம் கொண்டும், அதிலும் குறிப்பாக அமெரிக்காச் சென்று பணிபுரிய ஆசைப்படும் எந்த ஒரு இந்தியனுக்கும் அனுமதி அவ்வளவு சுலபமாகக் கிடைக்காது எனக் கருதப்படுகிறது.
மேலும், அமெரிக்காவில் பல வருடங்களாக பணிபுரிந்து கொண்டிருக்கும் இந்தியர்கள் ஒரு வேளை முன்னதாக க்ரீன் கார்ட் பெற்றிருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். ஒரு வேளை சமீபத்தில் தான் அவர்கள் அமெரிக்கக் குடியுரிமை வேண்டி விண்ணப்பித்திருந்தார்கள் என்றால் அவர்களுக்கு நிச்சயமாகக் குடியுரிமை கிடைக்காது என அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களால் நம்பப்படுகிறது.
இதனைத் தாண்டி, இனி அமெரிக்காவில் பிறக்கும் ஒரு குழந்தை அமெரிக்கக் குடியுரிமை பெற வேண்டும் என்றால் பெற்றோர்களில் ஒருவராவது அமெரிக்கர்களாகக் கட்டாயம் இருக்க வேண்டும். இனி வரும் டிரம்ப் ஆட்சியில் அப்படி இருந்தால் மட்டுமே, அந்த குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படும் எனக் கூறுகின்றனர். மேலும், அமெரிக்காவில் புலம்பெயர்ந்துள்ள சுமார் 10 லட்சம் இந்தியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது, டிரம்ப் அதிபராகப் பதவியேற்றவுடன் அவர் போடப் போகும் முதல் கையெழுத்தே இந்த குடியுரிமைத் தொடர்பான விஷயம் தான் பேசப்பட்டு வருகிறது. இதனால், அமெரிக்கக் குடியுரிமை வேண்டி விண்ணப்பித்துள்ள 10 லட்சம் இந்தியர்களின் அமெரிக்கக் கனவு பறிபோக வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதனால், அங்கு புலம்பெயர்ந்துள்ள இந்தியர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். டிரம்ப் அதிபராக அடுத்தடுத்து எடுக்கப் போகும் முடிவுக்காக அமெரிக்க நாட்டு மக்களைத் தாண்டி, உலகம் முழுவதும் உள்ள மக்கள் காத்துக் கொண்டிருக்கிறது.