விஜய் சொன்ன அந்த ‘ஓகே’? உற்சாக வரவேற்பு கொடுத்த ராணுவ வீரர்கள்!

தளபதி-69 படத்தின் ஷூட்டிங்கின் போது 100 அதிகாரிகளின் குடும்பத்தைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் விஜய்.

Vijay at Indian Army's Co 16 Madras Regiment

சென்னை : நடிகர் விஜய், 2026-ல் நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தலுக்கு தன்னையும் தனது தவெக கட்சியும் தயார் படுத்தி வருகிறார். இதனால், அரசியல் ஈடுபாடுகளில் மிகுந்த பிஸியாக இருக்கும் அவர் தனது கடைசித் திரைப்படமாக எச்.வினோத் இயக்கத்தில் ‘தளபதி-69’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஆஃபீஸர் அகாடமியில் நடந்து வருகிறது. ராணுவ வீரர் ஆவதற்கு சில இராணுவம் சார்ந்த அதிகாரிகள் பயிற்சி கொடுத்து பல ராணுவ வீரர்களை உருவாக்கி வரும் இடம் தான் இந்த அகாடமி. இந்த இடத்தில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கு உள்ள அதிகாரிகள் விஜயிடம், உங்களை காண எங்களது குடும்பங்கள், குழந்தைகள் ஆவலாக உள்ளார்கள் என தெரிவித்துள்ளனர். அதற்கு சற்றும் எதிர்ப்புத் தெரிவிக்காத விஜய் உடனடியாக அவர்களைச் சந்திப்பதற்கு ‘ஓகே’ சொல்லியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கு குடும்பங்கள் அவரை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதிகாரிகளின் குடும்பங்களை சந்திப்பதற்கு சென்ற விஜய்க்கு ராணுவ வீரர்கள் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜயுடன் அங்கு இயக்குநர் எச்.வினோத்தும் சென்றுள்ளார். விஜய் ஒரு அரசியல் கட்சித் தலைவராக இல்லாமல் ஒரு நடிகராக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பின், அங்கு வந்திருந்த நூறு அதிகாரிகளின் குடும்பத்துடன் உரையாடி, அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார் விஜய். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்