ஆரம்பமே அதிரடி காட்டும் டிரம்ப்! வெள்ளை மாளிகையில் முதல் பெண் தலைமை அதிகாரி நியமனம்!

அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் டிரம்ப், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி பொறுப்புக்கு முதல் முறையாக ஒரு பெண்ணை நியமனம் செய்துள்ளார்.

Trump - Susie Wiles

வாஷிங்டன் : அமெரிக்க வெள்ளை மாளிகையின் ‘சீஃப் ஆஃப் ஸ்டாஃப்’ என்ற தலைமைச் செயலர் பொறுப்பில் தனது தேர்தல் பிரசாரக் குழு மேலாளரான சூசி வைல்ஸ்ஸை நியமிக்க போவதாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபரின் முதல் நிலை உதவியாளராகச் செயல்படும் அந்த முக்கிய பதிவியில் ஒரு பெண் நியமிக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை செயலராக அதாவது முதல் பெண் ‘சீஃப் ஆஃப் ஸ்டாஃப்’ (Cheif Of Staff) சூசி வைல்ஸ் தான் என்பது வரலாற்றில் பதிவாகி உள்ளது.

அமெரிக்காவில் பல புதிய மாற்றங்களைக் கொண்டு வருவேன், அமெரிக்காவை மீண்டும் உற்று நோக்கும் நாடக மாற்றுவேன் என டிரம்ப் தேர்தலுக்கு முன் பரப்புரை மேற்கொண்டார். அதன் வெளிபாடாகவே இந்த முடிவு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வெள்ளை மாளிகைக்கு சூசி வைல்ஸ்ஸை தலைமை அதிகாரியாக பணியமர்த்தப்பட்டதைக் குறித்து டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “அமெரிக்காவின் மேன்மையை மீட்டெடுப்பதற்கான தேர்தல் பிரசாரப் பணியில் என்னுடன் இணைந்து அயராது உழைத்தவர் தான் சூசன் வைல்ஸ்.

அந்தப் பணியை இனியும் அவர் தொடர்வார். வரலாறு காரணாத வகையில் வெள்ளை மாளிகையின் முதல் தலைமைச் செயலராக அவர் பொறுப்பு வகிக்கவிருக்கிறார். அந்தப் பதவியில் அவர் பணியாற்ற அவருக்கு முழு தகுதியும் உள்ளது. வெள்ளை மாளிகை தலைமைச் செயலர் பதவியின் மூலம் சூசன் வைல்ஸ் அமெரிக்கவுக்கு மேலும் பெருமை சேர்ப்பார்.

அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை சூசன் வைல்ஸ் எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறார்”, என டிரம்ப் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் இது போன்ற மாற்றங்கள் உலகம் முழுவதும் உற்றுநோக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்