ரூபாய் 11,000,00,00,000 பெட்ரோல் விலையேற்றத்தால் இலாபம் கிடைத்துள்ளது…காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு..!!
மத்திய பிஜேபி அரசின் ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக கோவையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசு கூறியதாவது,
“ரஃபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தற்போதைய மத்திய அரசு மக்கள் மீது பெட்ரோல் விலையேற்றத்தை பரிசாக அளித்துள்ளது.எனவே மக்கள் இந்த பிஜேபி அரசு வீழ வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என்றார்.தொடர்ந்து பேசிய அவர் நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது இதன் மூலம் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசிற்கும், பெட்ரொலிய நிறுவனங்களுக்கும் லாபம் கிடைத்துள்ளது என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
DINASUVADU