பாகிஸ்தானில் ‘டிரம்ப்பின் மகள்’? வெற்றிக்கு பின் வைரலாகும் பெண்ணின் பேட்டி வீடியோ!!
அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வாகியுள்ள நிலையில், 'நான் தான் டிரம்ப்பின் மகள்' என ஒரு பெண் அளித்துள்ள பேட்டி வைரலாக பரவி வருகிறது.
இஸ்லாமாபாத் : அமெரிக்காவில் 2-வது முறையாக அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தான் தேர்தலில் வெற்றி பெற்றதால் அவரது ஆதரவாளர்களுடன் கொண்டாடி வருகின்றார். மேலும், டொனால்ட் டிரம்பின் வெற்றி குறித்து உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள், பேட்டிகள் போன்றவை வைரலாகி வரும் அதே வேளையில் பாகிஸ்தானிலிருந்து பெண் அளித்த பேட்டியும் வைரலாகி பரவி வருகிறது. அது என்னவென்றால், டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பானதாகும்.
ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ள அந்த பெண், “நான் தான் டொனால்ட் டிரம்பின் மகள்” என்று அவர் கூறி இருக்கிறார். இது தொடர்பான அந்த பெண் பேசிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் அந்த பெண் பேசுகையில், “ட்ரம்ப் தான் எனது தந்தை, இதில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.
ஆங்கிலேயர்கள் இங்கு வந்து என்னைப் பார்க்கும் போது, இந்த பெண் இங்கே என்ன செய்கிறார் என்று ஆச்சரியப்படுகிறார்கள். நான் ஒரு முஸ்லிம் மற்றும் அமைதியை விரும்புபவள். எனது மகளை உங்களால் கவனித்துக் கொள்ள முடியாது என்று என் தந்தை டொனால்ட் டிரம்ப் எப்போதும் என் அம்மாவிடம் கூறுவார்”, என பேசியிருக்கிறார்.
Does @realDonaldTrump know he has children in Pakistan who speak Urdu & English in Punjabi? pic.twitter.com/anhRKbiLGo
— Pakistan Untold (@pakistan_untold) November 6, 2024
இருப்பினும், இந்த வீடியோ எங்கிருந்து வெளியிடப்பட்டது? எதற்காக அந்த பெண் அப்படிப் பேசுகிறார்? இதன் உண்மைத் தன்மை என்ன? என்பது குறித்து எந்த தகவலும் இது வரை வெளியாகவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வளை தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.