“மோசடி மன்னனின் கூட்டாளி மோடி” ராகுல் விளாசல்..!!

Default Image

கடந்த 2016 மார்ச் மாதம் கிங்பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா வங்கிகளில் 9000 கோடி வரை மோசடி செய்து விட்டு இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார்.

பின்னர் அவர் லண்டனில் இருப்பதாக தகவல் கிடைத்தும் இன்றளவும் கைது செய்யப்படாமல், நாடு கடத்துவது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் மல்லையா, லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது தான் இந்தியாவில் இருந்து வருவதற்கு முன் அருண் ஜேட்லியை சந்தித்தேன் என அதிர்ச்சியூட்டும் விதமான தகவலை வெளியிட்டார்.

இதனிடையே, இன்று ராகுல் தனது டிவிட்டரில் கூறியதாவது,

“பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஐ, மல்லையாவின் தேடுதல் நோட்டீஸில் எதற்காக மாற்றம் செய்தனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.அவர்கள் மல்லையாவிற்கு தகவல் தெரிவிக்கும் எண்ணத்திலேயே பிடிக்க வேண்டும் என்ற வார்த்தைக்கு பதிலாக தகவல் தெரிவிக்க வேண்டும் என  மாற்றம் செய்திருக்க வேண்டும்.

இது போன்ற பெரிய வழக்கில் பிரதமரின் அனுமதி இல்லாமல் சிபிஐ மாற்றம் செய்தது எப்படி. எனவே பிரதமர் மோடியும், மோசடி மன்னனுக்கு மறைமுகமாக உதவியுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்