மாணவர்களே ஹாப்பி நியூஸ்! பிஎம் வித்யாலக்ஷ்மி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கடனுதவி வழங்கும் பிஎம் வித்யாலட்சுமி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

PM Vidhyalakshmi Scheme

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கும் பிஎம் வித்யாலட்சுமி (PM Vidhyalakshmi) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. உயர்கல்வி படிக்க விரும்பும் தகுதி உள்ள மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று உயர்கல்வி படிக்கலாம் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் ரூபாய் வரை மாணவ, மாணவிகள் கடனுதவி பெற்றுக் கொள்ள முடியும். மேலும், ரூ.7.50 லட்சம் வரை மத்திய அரசின் உத்தரவாதம் இருக்கும். ரூ.10 லட்சம் ரூபாய் வரையில் கடனுதவி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 3% சதவீதம் வட்டிச் சலுகையும் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உயர்கல்வித் துறை இந்த பிஎம் வித்யாலக்ஷ்மி திட்டத்தை செயல்படுத்தும். PM-Vidyalaxmi என ஒரு போர்ட்டலையும் (Portal) இந்த உயர்கல்வித் துறை நிர்வகிக்கும். இதற்கு தகுதியுள்ள மாணவ/மாணவிகள் கல்விக் கடன்கள் பெற வேண்டும் எனில் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிஎம் வித்யாலக்ஷ்மி திட்டத்தின் கீழ், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) படி, முதல் தரவரிசையில் உள்ள பொது அல்லது தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் தகுதி பெறும் அனைத்து மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்